கிறிஸ்துவின் ஊழியம் THE MINISTRY OF CHRIST ஜூன் 7, 1953, ஞாயிறு பிற்பகல், ராபர்ட்ஸ் பார்க் அரங்கம், கானர்ஸ்வில், இந்தியானா, அமெரிக்கா 53-06-07A 1. சகோதரன் ரஷ், உங்களுக்கு நன்றி. மதிய வணக்கம், நண்பர்களே. இந்தப் பிற்பகல் வேளையில், நல்ல செய்தியை - இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்று மனுஷர்கள் மத்தியில், அவருடைய சபையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை கொண்டு வருவதற்கும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பாதுகாப்பில் மீண்டும் இங்கே இருப்பதும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. நேற்றிருந்த அதே இயேசு தான் இன்றும் என்றென்றுமாக இருப்பார். அவர் மாறுவதேயில்லை. மேலும் இப்பொழுது, கடந்த சில இரவுகளில் கூட்டத்தில் முன்னேற்றம் இருப்பதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தர் எவ்வளவாக ஆசீர்வதித்திருக்கிறார்! எல்லா வகையான வியாதிகளிலிருந்தும், உபத்திரவங்களிலிருந்தும், மற்றவைகளிலிருந்தும் சுகம் பெற்றவர்களுடைய சாட்சிகள் கூட்டத்தினரிடமிருந்து வந்த வண்ணம் உள்ளன. இங்கேயிருப்பவர்களைத் தவிர வெளியிலிருந்தும் சாட்சிகள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களில் சிலர் எழுதி, தெரிவிக்கின்றனர். அவர்கள், ‘நல்லது, எனக்கு ஒரு குழந்தை இருந்ததென்று உமக்குத் தெரியும். அதனுடைய கால்கள் கட்டப்பட்டிருந்தது. நான் அதை வீட்டிற்கு கொண்டு சென்று, கட்டப்பட்டிருந்ததை அவிழ்த்து விட்டேன்; அதனால் நடக்க முடிந்தது’ என்று கூறுகின்றனர். மேலும் அப்படியே... பாருங்கள்? அநேக தடவைகளில், வெளியில் சம்பவித்துக் கொண்டிருப்பவைகள் ஒவ்வொன்றையும் என்னால் கூற இயலாது; நான் எப்போதாவது அதைக் குறித்து சற்று பேசுகிறேன். இங்கே நடுப்பகுதியில் நான் கவனிக்கிறேன். அங்கே பின்னால் ஒரு வெளிச்சம் உள்ளது, அது சரியாக இங்கேயும் உள்ளது, சில சமயங்களில் அது அங்கே நின்று கொண்டிருப்பதையும் நான் காண்கிறேன், ஆனால் அது யார் என்றோ, அது எங்கேயுள்ளது என்றோ என்னால் காண முடியவில்லை. எனவே அது வேறு எங்காவது அசைவாடுகிற வரையில் நான் அப்படியே காத்திருக்கிறேன். ஆனால் ஜனங்கள் ஆசீர்வதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன், நான் அதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். 2. இப்பொழுது, வழக்கமாக ஞாயிறு பிற்பகல் நடக்கும் கூட்டங்களில் - வார்த்தையிலிருந்து பேசும்படிக்கு வழக்கமாக எனக்குக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் ஒரு பேச்சாளன் என்று அழைப்பது போன்று, நான் ஒரு - ஒரு பேச்சாளன் அல்ல; நான் அதிக கல்வி கற்றவனல்ல, என்னுடைய கல்வி மிக மிக குறைவு. ஆனால் நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரைக் குறித்து பேச விரும்புகிறேன் - சத்தியமென்று நான் அறிந்தவைகளை. எனவே... இங்கேயிருக்கும் என் நண்பர்களில் அநேகர் ஃபோர்ட் வேய்னிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஒரு இரவில் ஃபோர்ட் வேய்னில் நடந்த கூட்டத்தில் நான் இருந்ததை நினைவு கூருகிறேன்; நான் பின்னால் இருந்தேன்... நான் அப்படியே உள்ளே வந்தேன், அங்கே சகலத்தையும் அறிந்த அல்லது குறிப்பாக இலக்கணத்தையும் அறிந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் என்னிடம் பேசினார்; அவர், ‘சகோதரன் பிரன்ஹாம், உம்முடைய இலக்கணம் மிகவும் மோசமாக உள்ளது’ என்றார். (hain’t)’ என்றார். நான், ‘ஆம் ஐயா, நான் அதை அறிவேன்’ என்றேன். அவர், ‘என்னே, நீர் மிக மோசமான தவறுகள் சிலவற்றைச் செய்கிறீர்’ என்றார். நான், ‘ஆம், ஐயா, நான் அதை அறிவேன்’ என்றேன். அவர் சொன்னார் - நான், ‘நல்லது, என்னுடைய தகப்பனார் மரித்துக் கொண்டிருக்கிறார், என் தாயாரோடும் பத்து பிள்ளை களோடும் நான் வசிக்கிறேன். எனக்கு வேலைக்குப் போக வேண்டியுள்ளது. என் வாழ்நாள் முழுவதும் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நான் படிக்கவில்லை’ என்றேன். ‘ஓ,’ அவர், ‘அது இப்பொழுது சாக்குப்போக்கு அல்ல; நீர் ஒரு மனிதன்’ என்றார். நான், ‘ஆம் ஐயா, அது - அது சரிதான்’ என்றேன். 3. அவர், ‘உங்களால் அதை சரி செய்ய முடியும். அல்லது ஏதோவொன்றை செய்ய முடியும், இலக்கணத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்’ என்றார். நான், ‘ஆம் ஐயா, அது சரிதான் என்று யூகிக்கிறேன்’ என்றேன். நான், ‘ஆனால் நான் கூட்டங்களை ஆரம்பித்த பிறகு...’ என்றேன். ‘ஏன்,’ அவர், ‘அது ஒரு அவமானம், நீர் அந்த எல்லா ஜனங்களிடமும், ஆயிரக்கணக்கான ஜனங்களிடமும் பேசுகிறீரே, ‘அவனுடைய (his)’, என்ற வார்த்தையையும், ‘கிடையாது என்ற வார்த்தையையும் பயன்படுத்த வேண்டும்’ நான், ‘நல்லது, அவைகள் சேர்ந்து நன்றாக இருப்பது போல் காணப்படுகிறதே’ என்றேன். எனவே அவர் சொன்னார் - அவர், ‘நல்லது, நான் - நான் உங்களிடம் கூறுகிறேன், உதாரணமாக, இன்றிரவு நீங்கள் மோசமான தவறைச் செய்தீர்கள், நான் உங்களைத் திருத்த விரும்புகிறேன்’ என்றார். நான், ‘சரி, ஐயா’ என்றேன். அவர், ‘இன்றிரவு மேலே இந்த ‘மேடைக்கு (polpit)’ வரும் எல்லா ஜனங்களும் என்றீர். மேலும்...’ என்று கூறினார். நான், ‘ஆம் ஐயா. அது சரியில்லையா?’ என்று கேட்டேன். 4. அவர், ‘இல்லை’ என்றார். அவர், ‘நீர் ‘மேடை (pulpit)’ என்று சொல்லியிருக்க வேண்டும்’ என்றார். ‘நீர் ‘போல்பிட் (polpit)’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘புல்பிட் (pulpit)’ என்று சொல்லியிருந்தால், ஜனங்கள் உம்மைப் பாராட் டியிருப்பார்கள்’ என்று சொன்னார். ஆகவே நான், ‘பிரியமான சகோதரனே, நான் உம்மை நேசிக்கிறேன். பாருங்கள்?’ என்றேன். ஆனால் நான், ‘கவனியுங்கள், அங்கேயிருக்கும் ஜனங்கள் நான், ‘போல்பிட் (polpit)’ என்று சொல்லுகிறேனா அல்லது ‘புல்பிட் (pulpit)’ என்று சொல்லுகிறேனா என்று கவலைப்பட மாட்டார்கள்; நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் எது - எது சரியோ அதை செய்யவுமே அவர்கள் விரும்புகிறார்கள்’ என்றேன். அது சரியே. எனவே அதைக் குறித்ததெல்லாம் அவ்வளவு தான். நான் வழக்கமாக இதை நினைவுகூருவதுண்டு. நான் முதலில் பாப்டிஸ்ட் சபையில் நியமிக்கப்பட்ட போது, ஒரு வாலிப போதகர் எவ்விதம் இருப்பார், குறிப்பாக பாப்டிஸ்டுகள் எவ்விதம் இருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். இங்கேயிருக்கும் சிலர் இதைக் கேள்விப்பட்டுள்ளீர்கள் என்று நம்புகிறேன். ஓ, நம்முடைய அக்குளில் நம் வேதாகமத்தை வைத்துக் கொள்வோம், நாம் மதிப்பிற்குரியவர்களாக இருந்தோம் என்று உங்களுக்குத் தெரியும். எனவே நான் வழக்கமாக என்னுடைய வேதாகமத்துடன் தெருவில் நடந்து செல்வேன். மேலும் நான்... யாரோ வொருவர், ‘நீர் ஒரு ஊழியக்காரரா?’ என்று கேட்பார். ‘ஓ, ஆம், ஐயா.’ 5. எனவே, நான் - நான் அப்படிப்பட்ட பெயர் பிரஸ்தாபத்தை விரும்பினேன். ஆகவே அது ஒரு சமயம் நடந்த சம்பவத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது... என்னுடைய தகப்பனார் ஒரு குதிரை சவாரி செய்பவராக இருந்தார்; அவர் காயப்பட்டார். அவர் குதிரைகளை அடக்குவார், அவர் முரட்டுக் குதிரைகளை அடக்கி அதன் மேல் சவாரி செய்திருக்கிறார், மேலும் அவர் மிகவும் திறமையான சவாரி செய்பவர். துப்பாக்கியைக் கொண்டு மிகவும் நன்றாக சுடுபவர். எனவே அவர் சொன்னார்... ஒரு நாள் நான் வீட்டில் இருந்ததை நினைவு கூருகிறேன், நான் என்னுடைய தகப்பனாரைப் போல் இருக்க விரும்பினேன். மேலும் நான்... எங்களிடம் வயதான, ஏர் உழுவதற்கான ஒரு குதிரை இருந்தது. இங்கே சுற்றிலும் இருக்கும் உங்களில் அனேகர் விவசாயத்தை விட்டு விலகியே இருக்கிறீர்கள், இல்லையா? எனவே ஒரு வயதான ஏர் உழுவதற்கான குதிரை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியும். அந்த வயதான குதிரையைக் கொண்டு நான் உழுதேன். அது ஆரம் பத்திலேயே வயதான குதிரை தான். நான் அந்த சாயங்கால நேரத்தில் அந்த குதிரையைக் கொண்டு தாமதமாக உழுது கொண்டிருந்தேன். நான் அந்தக் குதிரையை வெளியே அழைத்து செல்ல வேண்டுமென்று தகப்பனார் விரும்பினார், எனவே அந்த வயதான குதிரையை கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. அங்கே கீழே எனக்கு ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது, மரத்தினால் செய்யப்பட்ட உள்ளீடற்ற ஒரு தொட்டி. அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? அப்படியானால் இன்று நாட்டுப்புற பையனாக இங்கே இருப்பது நான் மட்டுமல்ல என்று யூகிக்கிறேன், அப்படித்தானே? ஒரு பழைய தண்ணீர் தொட்டியும் ஒரு பழைய குழாயும், அங்கேதான் நீங்கள் வழக்கமாக தண்ணீரை பம்ப் செய்து வெளியே எடுப்பீர்கள்... எனக்கு சிறிய சகோதரர்கள் இருந்தனர், அங்கேயிருந்த தானிய களஞ்சிய வேலியருகிலுள்ள பக்கத்தினூடாக அவர்களெல்லாம் உட்கார்ந்திருந்தார்கள். நான் அந்த தொட்டி முழுவதையும் தண்ணீரால் நிரப்பி, அந்தக் குதிரை தண்ணீர் குடித்த பிறகு, தகப்பனார் மீண்டும் வெளியே சென்று வேறு எங்கோ வேலை செய்து கொண்டிருந்தார். நான் உள்ளே சென்று அந்தக் குதிரைக்கு சேணம் பூட்டி, கை நிறைய முட்செடிகளைப் பறித்து, அதற்கு கீழே திணித்து வைத்து விட்டு, சேணத்தோடு கட்டப் பட்டுள்ள கயிற்றை கீழே இழுத்து, அந்த வயதான குதிரையின் மேலேறினேன். 6. அந்த வயதான குதிரையானது மிகவும் வயது சென்றிருந்தபடியால் அவனால் முடியவில்லை... அது விறைப்பானதாகவும் களைப்பானதாகவும் இருந்தது, அதனால் தரையில் அதனுடைய காலைப் பதித்து வைக்க முடியவில்லை, எனவே அது அங்கேயே நின்று கொண்டு, கனைத்தது, உங்களுக்குத் தெரியும். நான் என்னுடைய தொப்பியை கழற்றி விட்டு, முன்னும் பின்னும் ஆடினேன்; நான், ‘நான் ஒரு உண்மையான மாட்டுக்காரன் (cowboy)’ என்றேன், என்னுடைய எல்லா சிறிய சகோதரர்களும் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர், உங்களுக்குத் தெரியும். நான் அநேக திரைப்படங்களைப் பார்த்திருந்தேன், அவ்வளவு தான். எனக்கு 19 வயதாயிருந்த போது, நான் இந்தியானா விலுள்ள கிரீன்ஸ்மில் என்னும் இடத்தில் நடந்த முகாமுக்குச் செல்வதற்காக பாய் ஸ்கவுட் ரெசர்வேசனுக்கு போகிறேன் என்று என் தாயாரிடம் கூறினேன். நான் அங்கிருந்து மேற்கிலுள்ள அரிசோனாவுக்குச் சென்றேன். நான், ‘நான் உண்மையான குதிரை சவாரி செய்பவன், என்னால் இப்பொழுது குதிரைகளை அடக்க முடியும். எனவே நான் ஏன் கொஞ்சம் –கொஞ்சம் பணம் சம்பாதிக்கக் கூடாது’ என்று எண்ணினேன். அப்படியிருக்கும் போது, அங்கே முரட்டுக் குதிரை மீது சவாரி செய்யும் போட்டி ஒன்று நடைபெறுவதாக கேள்விப்பட்டேன். எனவே நீல நிற ஜீன்ஸ் ஆடையை அணிந்து கொண்டு, அங்கே சென்று சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்தக் குதிரைகள் அடைக்கப்பட்ட இடத்தையும், அவைகளை எங்கிருந்து வெளியே கொண்டு வருகிறார்கள் என்பதையும் கண்டேன். நான் அந்த வேலியருகில் உட்கார்ந்தவாறே கவனித்தேன், உருக்குலைந்த நிலையிலுள்ள ஒரு கூட்டம் மாட்டுக்காரர்கள் (cowboys) அங்கே இருந்தனர், கால்கள் உடைக்கப்பட்ட நிலையிலும், முற்றும் சோர்வடைந்த நிலையிலும் இருந்தனர். நான், ‘நானும் அவ்விடத்தை சேர்ந்தவன் தான்’ என்று எண்ணினேன். நான் வேலியைத் தாண்டி, அங்கு சென்றேன். 7. அவர்கள் கொண்டு வந்திருந்த ஒரு குதிரை அவர்களிடம் இருந்தது; அழைப்பாளர் முன்னே சென்று அந்தக் குதிரை எதுவென்றும், சேணம் பூட்டப்பட்ட அக்குதிரை எவ்வளவு பிரபலமான ஒன்று என்றும் கூறினான்...?... யாரோ ஒருவர் அக் குதிரையின் மேல் சவாரி செய்யப் போகிறார். எனவே அவர்கள் ஏதோவொரு பிரபலமான குதிரை சவாரி செய்பவனை வெளியே கொண்டு வந்தனர், அந்த ஆண் குதிரைக்குரிய அந்த சரிவான பாதையின் வழியாக அவன் வரும் நேரத்தில், அவன் அந்த வாய்ப்பை நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டியவனாக இருந் தான். எனவே நான் அங்கே நின்றிருந்த போது, இம்மனிதன் சேணத்தை கீழ் நோக்கி வைத்துக் கொள்வதை நான் கண்டேன், அவன் மகத்தான பெரிய நீண்ட கால்களையுடைய மனிதனாக இருந்தான், அவன் ஒரு நல்ல குதிரை சவாரி செய்பவனைப் போன்று காணப்பட்டான். அவன் சற்று அச்சேணத்தை அடித்த போது, பையனே, அக்குதிரையானது இரண்டு தடவை ஒரு சூரிய மீனைப் போன்று குதித்தது. சவாரி செய்தவனும், சேணமும் மற்ற எல்லாமுமே போய் விட்டது. அவன் அவ்வாறு செய்த போது, அவன் கீழே விழுந்தான், அந்தக் குதிரையை அழைத்துச் சென்று விட்டார்கள். ஆம்புலன்ஸ் வாகனம் வந்து, அந்த சவாரி செய் தவனை கொண்டு சென்றது. அவனுடைய காதுகள், கண்கள், மூக்கு, வாய் வழியாக இரத்தமானது வடிந்து கொண்டிருந்தது. எனவே இம்மனிதன் அந்த வேலியினூடாக வந்தான், ஒருவேளை சவாரி செய்வதற்காக இருக்கும் அந்த மாட்டுக்காரர்கள் எல்லாரும் அங்கே வரிசையாக இருந்தனர். அவன், ‘எந்த மனிதனுக்கும் நான் 50 டாலர்கள் தருவேன் - இந்தக் குதிரையின் மேல் சவாரி செய்யும் எந்த மனிதனுக்கும் நான் 50 டாலர்கள் தருவேன்’ என்றான். அவர்கள் உற்சாகமின்றி இருந்தனர். யாராலும் முடியவில்லை... எல்லாரும் அமைதியாயிருந்தனர். அவன் எனக்கு முன்பாக சவாரி செய்து வந்து, ‘ஐயா, நீங்கள் குதிரை சவாரி செய்யும் ஒருவரா?’ என்று கேட்டான். நான், ‘இல்லை, ஐயா’ என்றேன். அது என்னுடைய வயதான உழுவதற்கு பயன்படும் குதிரை அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த குதிரையில் வித்தியாசம் இருந்தது. 8. நான் வழக்கமாக சுற்றிலும் சென்று, நான் ஒரு பிரசங்கி என்று கூறுவேன், உங்களுக்குத் தெரியும், ஒரு நாள் நான் மிசௌரியிலுள்ள செயின்ட் லூயிஸில் இருந்தேன்; அங்கே ஒரு பெந்தெகொஸ்தே பிரசங்கியார் இருந்தார், அவருக்கு சங்கை. ராபர்ட் டாகெர்ட்டி என்று பெயர். அம்மனிதர் ஒரு கூடாரக் கூட்டத்தில் இருந்தார், அவர் மூச்சு ஒரு அளவை எட்டும் வரை பிரசங்கித்தார்; அவருடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டது (buckled); அவர் மூச்சைப் பிடித்து வைத்துக் கொள்வார். அவருடைய சத்தத்தை ஒரு நகர வட்டார தூரத்திற்கு உங்களால் கேட்க முடியும், திரும்பவும் வந்து பிரசங்கித்துக் கொண்டிருப்பார். யாரோ ஒருவர், ‘நீங்கள் ஒரு பிரசங்கியா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை, ஐயா’ என்றேன். 9. என்னுடைய பழைய மெதுவான பாப்டிஸ்ட் வழிமுறை யானது, அது அந்த அளவு வேகமாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. எனவே என்னால் செய்யக்கூடிய சிறந்ததை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நான் அவரை நேசிக்கிறேன். இந்தப் பிற்பகல் வேளையில் இந்த நேரத்தைப் பெற்றுக்கொள்ள நான் விரும்புகிறேன்... சாயங்கால ஆராதனையானது எப்பொழுதும் வியாதியஸ்தரைப் பற்றியதாகும். பேசிக் கொண்டிருக்கிறேன், அது ஏதோவொன்றாக இருக்கிறது... வியாதிப்பட்ட ஜனங்களிடம் இடைபடுதல், அது வேறொரு அபிஷேகமாகும், ஒரு வித்தியாசமான அபிஷேகம். அது ஒரு தூதன் அருகாமையில் நின்று கொண்டிருப்பதாகும். அது வேறொரு பரிமாணத்திற்குள் உடைத்துக் கொண்டு செல்கிறது. இன்று யாரோ ஒருவர் ஓர் உணவு விடுதியில் நடந்து வந்து, சுகமானதைக் குறித்தும், அவர்கள் எவ்வளவாக வியாதிப் பட்டிருந்தனர் என்றும், எவ்வளவு பயங்கரமான நிலையில் இருந்தனர் என்றும், அவர்கள் எவ்விதமாக சுகமாக இருக்கின்றனர் என்றும் என்னிடம் கூறினார். ஏன், அந்த நபரை எனக்கு ஞாபகம் இல்லை. வேறொரு மனிதர் - ஒரு வயதான மனிதர், தான் ஓர் ஹூஸ்டன் கூட்டத்திலிருந்து வருவதைக் குறித்தும், அவருக்கு விழி வெண்படல நோய் (sclerosis) அல்லது ஏதோவொன்று அல்லது வேறொரு கோளாறு அவருடைய நுரையீரலில் இருந்ததாகவும் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். முப்பது வருடங்களாக மோசமான நிலையில் இருந்தார், அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, அதே இரவில் அது ஒவ்வொன்றும் என்னை விட்டுப் போய் விட்டது’ என்று கூறினார். அந்த வயதான மனிதர் சரியாக இப்பொழுதே இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் – நான் காண்கிறேன். அது சரியே. அவர், ‘அது ஒவ்வொன்றும் என்னை விட்டுப் போய் விட்டது’ என்றார். அது முதற்கொண்டு அவர் நலமாக இருந்து வருகிறார். ‘என்னை உங்களுக்கு ஞாபகம் உள்ளதா?’ என்று கேட்டார். 10. நான்... உங்களுக்குத் தெரியும், நீங்கள், ‘உங்களை எனக்கு - எனக்கு ஞாபகம் இல்லை’ என்று நீங்கள் கூறுவீர்களானால், அது அற்பமான காரியமாக காணப்படுகிறது. நான் அதைக் கூற விரும்பவில்லை, ஆனால் எனக்கு ஞாபகம் இல்லை. நீங்கள் அதை என்னிடம் கூறுவீர்களானால், ஏன், நான் அதை சொப்பனத்தில் காண்பது போன்று தோன்றுகிறது. அன்றொரு இரவில், சரீரம் முடங்கிப்போனவளாய் படுத்திருந்த ஸ்திரீ சுகமடைந்ததைக் குறித்து அவர்கள் என்னிடம் கூறிக் கொண்டிருந்தனர். நான் - நான் அதை அப்படியே மறந்து விட்டிருந் தேன்; நான் அப்படியே... நான் அதைக்குறித்து ஏதோவொரு சொப்பனத்தை நான் காண்பதைப் போன்று தோன்றுகிறது. இப்பொழுது, இந்தப் பிற்பகல் வேளையில், ஒரு சிறு வேத பாகத்தை வாசித்து, ஒரு பழக்கமான பாடத்தின் பேரில் சிறிது பேசப் போகிறேன். நான் இந்தப் பிற்பகல் வேளையில், ‘பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடுதல்’ என்பதன் பேரில் பேசப்போவதாக இருந்தேன். நான் தவறாக நினைத்த காரணத்தால், கூட்டத்தை குறித்து அறிவிப்பு செய்தேன்... நான் இங்கே 2:30 மணிக்கு இருக்க வேண்டுமென்று நினைத்தேன். நாம் அடுத்த ஞாயிற்றுக் கிழமையில் தங்கியிருப்போமானால், கர்த்தருக்குச் சித்தமானால், நான், ‘பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவா சத்திற்காக போராடுதல்’ என்பதன் பேரில் பேசுவேன். இப்பொழுது, இன்று, நான் கொஞ்சம் வாசிக்க விரும்புகிறேன், வேதவாக்கியத்தில் பழக்கப்பட்ட ஒரு சிறிய இடத்திலிருந்து வாசிக்கலாம், அதை பரிசுத்த யோவான் 11-ம் அதி காரத்தில் காணலாம், அங்கே ஒரு மனிதன் மரித்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுகிறான். இந்த மனுஷனை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய இயேசு இன்னுமாக அதே கர்த்தராக இன்றும் மாறாதவராக இருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நண்பர்களே, அவர் மாறாதவராயிருக்கிறார், அது உண்மை, அவர் அதே கர்த்தராகிய இயேசுவாயிருக்கிறார். 11. என்னுடைய அபிப்பிராயத்தின்படி, இந்த முழு வேதாகமத்தின் முழு அமைப்பு முறையானது ஒரு நாடக கதையாக உள்ளது, அப்படியே ஏதேனில் ஆரம்பித்து, வாசலின் வழியாக வெளியே வந்து, சரியாக சிலுவையின் பாதையில் மீண்டும் திரும்ப வழிநடத்துகிறது: அது அப்படியே தேவன் தம்முடைய சிந்தையில் வைத்திருந்த ஒரு பெரிய காட்சி படமாக உள்ளது. தேவன் உலகம் கூட தோற்றத்திற்கு முன்பே அதைக் காண்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, ஒரு சந்திரனோ, நட்சத்திரமோ, எதுவும் இருந்ததற்கு முன்பே அதோ அங்கே விண்வெளியில் அவர் இருந்ததைக் கண்டார். அதெல்லாம் என்னவாக இருக்கும் என்று அவர் தம்முடைய சிந்தையில் அந்த படத்தை வரைந்தார். ஒவ்வொன்றும் (உண்டாக வேண்டுமென்று) அவர் உரைத்தார், ‘உண்டாகக் கடவது’ என்றார். ஒவ்வொன்றும் அப்படியே அதனுடைய இடத்தில் வரத் தொடங்கியது. அவர் அற்புதமானவராக இல்லையா? அதை எண்ணிப் பார்க்கும் போது... பிறகு, அவருடைய மகத்தான இராஜரீக அன்பினால், அவர் கீழே இறங்கி வந்து, என்னையும் உங்களையும் போன்ற இழக்கப்பட்ட பாவிகளை இரட்சிப்பதைக் கண்டார். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கவிஞன் இவ்வாறு கூறினதில் வியப்பொன்றுமில்லை: தேவனுடைய அன்பு எவ்வளவு ஐசுவரியமானது, எவ்வளவு தூய்மையானது! ஆழமறியக்கூடாததும், வலிமையானதுமாய் உள்ளது! அது என்றென்றுமாக சகிக்கும், அதுவே சுத்தர்கள் தூதர்களின் கீதம். 11ம் அதிகாரம் 18ம் வசனம் தொடங்கி நான் சிறிது வேத வாக்கியங்களை வாசிக்கப் போகிறேன்: (யோவான் 11:18-27) பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 12. நாம் சிறிது நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்து வோமா? எங்கள் பரலோகப் பிதாவே, நித்தியத்தின் இப்பக்கத்தில் அல்லது கர்த்தருடைய வருகையில், இப்பொழுது நாங்கள் இன்னும் ஒரு நாள் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். நான் சொல்லியிருக்கிறேன்... இந்தக் கூட்டத்திலுள்ள ஜனங்கள் அநேகமாக உம்முடைய நேச குமாரனை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன். பூங்காக்கள் வழியாக வரும்போது, நீச்சல் குளங்கள் முழுவதும் அரை நிர்வாணமாக உடுத்தியிருக்கிற வாலிப பெண்கள் தாங்கள் மிகவும் நேசிக்கிற அந்த அழகான சரீரமானது இந்நாட்களில் ஒன்றில் தோல் புழுக்களால் அரிக்கப்படப் போகிறது என்பதைக் குறித்து உணர்வில்லாதவர்களாய், சிரத்தையற்று, பூங்காக்களில் நீளமாக படுத்துக் கிடப்பதைக் காண்கிறோம், அவர்களுடைய ஆத்துமா நியாயத்தீர்ப்பில் தேவனை முகமுகமாய் சந்திக்க வேண்டும். கர்த்தாவே, ஜனங்கள் விழித்தெழுந்து, நாங்கள் முடிவுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்பதை உணரும்படிக்குக்குத் தூண்டும் ஏதோவொன்று இப்பிற்பகல் வேளையில் செய்யப்பட வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இந்த வாரத்தினூடாக நீர், செவிடர்களைக் கேட்கப்பண்ணினதற்காகவும், முடவர்களை நடக்கப்பண்ணினதற்காகவும், நீர் நடப்பித்த அநேக வல்லமைமிக்க அடையாளங்களுக்காகவும் அற்புதங்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உண்மையாகவே, சந்தேகத்திற்கு இடமில்லாமலும், அப்பட்டமாக தேவனுடைய வல்லமையானது இந்தக் கடைசி நாளில் மனுக்குலத்தினிடையே அசைவாடிக் கொண்டிருக்கிறது. 13. இன்று இங்கே இந்தக் கூரையின் கீழே இந்த ஜனங்கள் உம்மை ஆராதிக்கும்படி கூடியிருக்கின்றனர். கர்த்தாவே, உம்முடைய பிள்ளைகளில் அநேகர் சோர்ந்து போயுள்ளனர், அவர்கள் இந்தத் துன்மார்க்கமான வாழ்வைக் காண் கின்றனர். ஆனால் அவர்கள் தாவீதை நோக்கிப் பார்ப்பார்களாக, நீர் அவனிடம் பேசின போது, அவன், ‘ஆம், ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்; அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சை மரத்தைப் போல் தழைத்தவனாயிருந்தான்’ என்றான், ஆனாலும், ‘முடிவில் அவனைக் கவனியுங்கள்: அப்போது தான் அதையெல்லாம் சொல்லுவார்கள். மரண தூதன் அறைக்குள் வருகிற அந்த மணி நேரத்தில், மந்தாரம் அறைக்குள் கடந்து செல்லும் போது, நாம் அந்தப் பள்ளத்தாக்கினூடாக கீழே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம். அதன்பிறகு அதைக்குறித்து என்ன இருக்கிறது?’ என்றான். தேவனே, உம்முடைய பிள்ளைகளை இன்று ஆசீர்வதியும்; அவர்களுடைய விசுவாசத்தை அதிகரியும்; அவர்களுடைய ஆத்துமாக்களை ஆசீர்வதியும், அவர்கள் எங்களுடைய இரட்சிப்பின் தேவனில் களிகூருவார்களாக. வியாதியஸ்தர் சுகமடைவார்களாக; வியாதியிலும் உபத்திரவத்திலும் இங்கே உட்கார்ந்திருக்கும் அநேகர் பரிசுத்த ஆவியைத் தங்களுடைய இருதயத்தில் பற்றிக் கொண்டு, அவர்களுடைய விசுவாசமானது இன்று பிரகாசித்து, தொடர்ந்து செல்லட்டும், இதை அருளும், பிதாவே. இப்பொழுதும், கர்த்தாவே, உம்முடைய உபயோகமற்ற ஊழியக்காரனாகிய எனக்கு நீர் ஒத்தாசை செய்யும். இதற்கு முன்பு ஒருபோதும் பேசியிராதது போல உம்முடைய ஊழியக்காரன் மூலமாகப் பேசும். கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 14. அவர்கள் - அவர்கள் போய் ஏறக்குறைய 6 மணிக்கு ஜெப அட்டைகளைக் கொடுக்கத் தொடங்குவார்கள் என்று நான் அறிவேன், நாம் போதுமான அளவு சீக்கிரமாக போக வேண்டியுள்ளது, நீங்கள் ஜெபிக்கும் போது, உங்களிடம் பேசுவதற்கு சிறிது நேரமே எடுத்துக் கொள்வேன். இந்தப் பிற்பகல் வேளையில் இங்கே எத்தனை பேர் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள்? பார்க்கலாம், நல்லது, அது அற்புதமானது. ஓ, ஏறக்குறைய, அநேகமாக நூறு சதவீதம் பேர். இப்பொழுது, நம்முடைய பாடமானது, இந்தப் பிற்பகல் வேளையில் நம்முடைய வாசிப்பானது, நம்முடைய கர்த்தராகிய இயேசுவினுடைய ஆரம்ப கால ஊழியத்தைப் பற்றியதாகும். அவர் அப்பொழுது தான் பிரபலமானவராக ஆகியிருந்தார். நீங்கள் அவரைக் கவனிப்பீர்களானால், அவருடைய முதலாவது வருஷத்தில் மிகவும் பிரபலமானவராக இருந்தார், அதன்பிறகு இரண்டாவது வருஷத்தில் தொய்வாக ஆனார், அதன்பிறகு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். முதலாவது எல்லாமே புதிதாக இருந்தது, எவ்விடத்திலும் அதன் பேரில் கவரும்படியாக இருந்தது. ஜனங்களுடைய சிந்தனைகளை அறிந்து, தாம் செய்ய வேண்டுமென்று பிதாஅவரிடம் காண்பித்த காரியங்களை செய்யக்கூடிய இந்த அற்புதமான மனிதரைக் காணும்படி ஒவ்வொருவரும் வந்தனர்: அவர் குருடரைக் காணும்படி செய்து, செவிடரைக் கேட்கச் செய்தார். அவர்கள் அப்படிப்பட்ட காரியங்களை ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால் பிறகு, அந்நாளின் மதத்தலைவர்கள் அவர் ஒரு பிசாசாயிருக்கிறார் என்று கூறினர். நான் இந்த ஒலிப் பெருக்கியின் மிக அருகில் நின்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவர்கள் அவரை ஒரு பிசாசு என்று கூறினர். நிச்சயமாக, ஜனங்கள் அதைக்குறித்து கற்றிருந்தபடியே அவர்கள் செய்தனர். அது சரியானதாகவோ அல்லது மேலானதாகவோ உள்ளதா? அது... சரிதான், நான் அப்படியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன், நான்... உங்களை செவிடர்களாக ஆக்க விரும்பவில்லை, எனவே... 15. எனவே அப்போது அவர்களுடைய மதத்தலைவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை என்பதை அவர்கள் கண்டு கொண் டனர். எனவே அப்போது, அவர் ஜனங்களால் மிகவும் வெறுக்கப்பட்டார். ஏழை வகுப்பு ஜனங்கள் மத்தியிலோ, சாதாரண... சாதாரண ஜனங்கள் அவருடைய வசனத்தை சந்தோஷத்தோடு கேட்டார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ளவர்களும், இவ்வுலகத்தில் ஏராளமான காரியங்களையும், அதிக பணம் படைத்தவர்களுமாகிய வகையினர் அவர் பேரில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. நல்லது, அவர் ஒரு மதவெறியர் என்றும் அவர் ஒரு பிசாசு என்றும், டாக்டர் இன்னார் இன்னார் கூறினார். எனவே அங்கே அவருக்கு எதுவுமிருக்கவில்லை, எனவே அவர்கள் அப்படியே அவரிடமிருந்து தூர விலகியிருந்தனர். அவர்கள் தங்களுடைய சொந்த கூட்டத்தினரிடன் சென்றனர். நல்லது, ஒரே சிறகுடைய பறவைகள், அது உண்மை. ஆனால் அவரை விசுவாசித்து அவரை நேசித்தவர்கள் அவருடன் இருந்தனர். அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் லாசரு என்ற பெயருடைய ஒரு - ஒரு வாலிபனும், ஒன்று அல்லது இரண்டு சகோதரிகளும்: ஒருவள் பெயர் மரியாள், மற்றவள் பெயர் மார்த்தாள். சரித்திர ஆசிரியர்கள் கூறுவதை கொண்டு, லாசரு ஒரு வேதபாரகனாக இருந்தான் என்று நாம் கூறுகின்றோம், அவன் நியாயப்பிரமாணத்தை எழுதி, அதை மறுபிரதி எடுத்து வந்தான். அது எவ்வளவு கண்டிப்பானதாக இருந்ததென்று யாராவது அறிந்திருந்தால், வார்த்தையில் ஒரு தவறு செய்தாலும் அது ஏதோவொரு வித்தியாசத்தை அர்த்தப்படுத்திவிடும். எனவே அது பரிபூரணமாக இருக்க வேண்டி யிருந்தது, உத்தமமான, கீர்த்தி வாய்ந்த, பரிசுத்தமான ஒரு நபர் தான் அதை எழுத வேண்டியிருந்தது. எனவே அவன் நற்குணம் படைத்தவனாகவும், மதரீதியான நல்ல அந்தஸ்து உள்ளவனாகவும் இருந்தான் - அவ்வாறு இருக்க வேண்டியிருந்தது. 16. நாம் கூறினபடி மார்த்தாளும் மரியாளும் ஆலயத்திற்காகவும் மற்றவைகளுக்காகவும் திரைச்சீலைகளை செய்பவர்களாக - தையல் வேலை செய்பவர்களாக இருந்தனர். பூமியில் அவர்கள் தனிமையாயிருந்தனர், அவர்களுடைய பெற்றோர் மரித்து விட்டிருந்தனர். இச்சமயத்தில் இயேசுவின் வளர்ப்பு தந்தையான யோசேப்பும் மரித்து விட்டிருந்தார் என ஊகிக்கிறேன். அவர்களுடன் வாசம் பண்ண இயேசு வந்திருந்தார். அவர் அப்படியே விலகி தனியே ஓரிடத்திற்கு போய் அவருடைய அலுவலை செய்யும் அளவுக்கு அவர் மிகவும் கீர்த்தி வாய்ந்தவராயிருந்தார். இப்பொழுது, அவர் ஜீவித்துக் கொண்டிருந்தார்... அது ஏற்ற காலத்திற்கு வந்திருந்தது. ஒவ்வொன்றும் சரியாக அதனுடைய குறித்த காலத்தில் வருகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒவ்வொன்றும்... நீங்கள் வருடத்தின் இலையுதிர்காலத்தில் கோதுமையை நடுகிறீர்கள்; வருடத்தின் வசந்த காலத்தில் அது பலன் கொடுக்கிறது அல்லது தேவன் அது பலன் கொடுக்கும்படி செய்கிறார். நீங்கள் - நீங்கள் சோளத்தை வசந்த காலத்தில் நடவு செய்து, இலையுதிர் காலத்தில் அறுவடை செய்கிறீர்கள். ஒவ்வொன்றுக்கும் அதனதன் நேரம் உண்டு, அப்படியே அவருடைய ஜீவியத்தைப் போல, அதற்கு தொடக்கம் இருந்தது, அது அதனுடைய சிறந்த பாகத்தைக் கொண்டிருந்தது, அவர் முடிவுக்கு வரும்போது, அதனுடைய நிழலைக் கொண் டிருக்கிறது. 17. சகோதரர்களே, நம்முடைய ஊழியங்களும் அதேவிதமாகவே ஆகிவிட்டது. தொடக்கத்தில் நமக்கு சிறந்தது இருந்தது, நம்முடைய இடைப்பட்ட பாகமும் சிறப்பாக இருந்தது, அதன்பிறகு அது முடிவுக்கு வருகிறது. உங்களுடைய ஜீவியமானது குழந்தை பருவத்தில் தொடங்கி, அதன்பிறகு உங்களுடைய வாலிப பருவத்தில் வந்து, பிறகு நடுத்தர வயதை அடைந்து, பிறகு முடிவு பெறுகிறது. அதே போல, சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைகிறது, ஒவ்வொன்றுக்கும் தொடக்கமும் முடிவும் உண்டு. ஒவ்வொரு முறையும் தேவன் பூமியில் ஏதோவொன்றைச் செய்ய ஆயத்தமாகும் போது, அவர் எப்போதுமே... அவர் நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பாக, முதலில் இரக்கத்தை அனுப்புகிறார். மனிதன் இரக்கத்தைப் புறக்கணிக்கும் போது, அங்கே நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்படுவதில்லை. அது உண்மை தானா? நீங்கள் இரக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அப்போது உங்களுக்கு நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்படுவதில்லை. எனவே தேவன், அவர் எதையும் செய்வதற்கு முன்பு, அவர் எப்போதுமே ஜனங்களுக்கு முன்னறிவிக்கிறார். நீங்கள் அதை விசுவாசித்தால், நாம் இந்நாளில் இங்கே கானர்ஸ்வில்லில் இருப்போம் என்பது முன் குறிக்கப்பட்டிருந்தது என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் கோமாளித்தனமாக காரியங்களைச் செய்வதில்லை. அவர் அப்ப டிப்பட்டவரல்ல. அவர் காட்சிப்பொருளாய் வைப்பதில்லை. அவர் அதை ஒரு நோக்கத்திற்காகச் செய்கிறார். ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அதனுடைய இடத்திற்குப் போகிறது. ஒரு சிறு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் தவறுவதில்லை, அது என்றென்றுமாக நிலைத்து நிற்கிறது. நான் அந்த வேதவாக்கியத்தை எண்ணிப் பார்க்கிறேன், ‘உம்முடைய வார்த்தையானது என்றென்றைக்கும் பரலோகத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.’ பரலோகத்தில் அதை சந்தேகிக்க யாருமேயில்லை. அதை சந்தேகிப்பது மனிதர்களாகிய நாம் தான். பரலோகத்திலுள்ள ஒவ்வொன்றும் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கிறது. தேவன் என்ன சொல்லுகிறாரோ, அது அதை தீர்த்து வைக்கிறது. ‘உமது வசனம் என்றென்றைக்கும் பரலோகத்தில் நிலைத்திருக்கிறது,’ அது ஏற்கனவே நிலைத்திருக்கிறது. 18. இப்பொழுது கவனியுங்கள், ஏதேன் தோட்ட முதற் கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்துள்ள பிரகாரமாக, இயேசுவின் வருகைக்கு சற்று முன்பு, யோவான் ஸ்நானகன் அவருடைய வருகையை தீர்க்கதரிசனமாக உரைத்தான். மேலும் சகரியா... நீங்கள் இப்பொழுது அந்தக் குடும்பத்தைக் கவனிக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன்: அவன் பக்தியுள்ள, பரிசுத்தமான ஒரு மனிதன். அவர்களுடைய குடும்பத்தில் மிக மோசமான ஏதோவொன்று சம்பவித்திருந்தது. அவர்கள் கொண்டிருந்தனர் - அல்லது அவர்கள் ஒரு குழந்தையை விரும்பினர். அந்நாட்களில் குழந்தையில்லாமல் இருப்பதென்பது ஒரு அவமானமாக இருந்தது; இன்று ஏறத்தாழ ஒரு குழந்தை இருப்பது அவமானமாக இருக்கிறது. அது எப்படியாக மாறி விட்டது. பிள்ளைகளை வளர்க்க ஜனங்களுக்கு நேரமில்லை. இப்பொழுது கவனியுங்கள், இங்கே இந்த ஆராதனைகளில் கர்த்தருடன் இருக்கும்படியான என்னுடைய பிற்பகலாக இது உள்ளது. நான் கூற வேண்டுமென்று அவர் என்னிடம் சொல்லுவதையே நான் கூறுகிறேன். ஆனால் இது ஒரு துக்கமான நாளாக உள்ளது, அவர்கள் துணிதுவைக்கும் இயந்திரங்களையும், பாத்திரம் கழுவுபவைகளையும், மற்றும் ஒவ்வொன்றையும் உண்டாக்கின போது, அவர்கள் மதுக்கடைகள் மற்றும் காரியங்களைச் சுற்றிலும் படுத்துக் கிடக்கவும், குடித்து, புகை பிடித்து, தேசத்தினூடாக ஓடித் திரியவும் ஸ்திரீகளுக்கு, இந்த நேரம் எல்லாவற்றையும் கொடுத்தது. அது சரியே. அவசர அவசர மாக வந்து, சோம்பேறித்தனமாக எதுவுமே செய்யாமல் அதிகமான நேரத்தைக் கழிக்கின்றனர். நீங்கள் தூரிகையால் தேய்த்துக் கழுவி, இம்மாதிரியான துணி துவைக்கும் இயந்திரங்களைக் கொண்டு மீண்டும் கழுவி, வழக்கமாக என்னுடைய தாயார் செய்யும் விதமாக செய்தது நன்றாக இருந்தது. அது சரியே. 19. இப்பொழுது, அது மாத்திரமல்ல, மனிதனும் கூட, அவர்கள் வெளியே சென்று கோல்ஃப் விளையாட்டையோ அல்லது அதைப்போன்ற ஏதோவொன்றை விளையாடுவதற்காக நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது, அவர்கள் சிறிது உடற்பயிற்சி செய்து, தங்கள் கொழுப்பைக் கரைக்க வேண்டும். என்ன ஒரு பரிதாபம். மற்ற உலகத்தார் பட்டினியால் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காரியங்களுக்காக நாம் ஆக்கினைக்குட்படப்போவதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நிச்சயமாக, நாம் ஆக்கினைக்குட்படுவோம். நான் அந்த தேசங்களை விட்டு வந்துள்ளேன், அந்த ஏழையான சிறு பிள்ளைகள் தங்களுடைய கரங்களையும் கண்களையும் பிசைந்து கொண்டே, அழுது கொண்டிருந்தனர், அவர்களுடைய அழுக்கான சிறிய முகங்கள் இதைப்போன்று இருந்தன, அவர்கள் ஒரு அப்பத் துணிக்கைக்காக அழுது கொண்டிருந்தனர். அமெரிக்காவில் சில... சில சமயங்களில், பிற்பகலில் அல்லது ஏறத்தாழ மூன்று மணியளவில் (midafternoon), எட்டு டாலர் மதிப்புள்ள சாப்பாட்டுத் தட்டையும், அதில் பாதி சாப்பாட்டையும் குப்பைத் தொட்டியில் எறிந்து (raked off), பன்றிகளைப் போஷிக்கிறோம். அது சரியல்ல. சகோதரனே, நாம் அக்காரியங்களுக்காக அதிக மாக கிரயத்தை செலுத்தும்படி தேவன் செய்கிற வேளை வருகிறது. ஆனால் இந்த மனிதனாகிய சகரியாவும் அவனுடைய மனைவி எலிசபெத்தும் நீதியான ஜனங்களாயும், பரிசுத்தமானவர்களாகவும், எல்லா நேரமும் ஜெபிக்கிறவர்களாகவும் இருந்தனர். இப்பொழுது, 800 அல்லது 712 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்த போதிலும், அது நிறைவேறும் வேளையானது வருகிறது. ‘வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்.’ 20. தேவனுடைய தீர்க்கதரிசன சக்கரங்களைக் கவனியுங்கள், தீர்க்கதரிசனம் நிறைவேற ஆயத்தமாயிருந்த வேளை, அங்கே அந்த ஒன்று அடைந்த போது, வேறொரு அழைப்பு அங்கிருக்கும். இயேசு இங்கே சரியான நேரத்தில் இருப்பார். சபையானது சரியான நேரத்தில் மேலே போய் விடும். எதுவுமே தவறாது. தேவன் நியமித்தபடியே சம்பவிக்கும். இப்பொழுது, இந்த ஜனங்களைக் கவனியுங்கள். தேவன் அவருடைய வார்த்தையை நிறைவேற்றக்கூடிய ஏதோவொரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக சுற்றிலும் நோக்கிப் பார்க்கும்படியாக தேவன் பூமிக்கு இறங்கி வந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. அவர் நீதிமானாகிய சகரியா என்ற பெயருடைய ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார். தேவன் எப்போதுமே தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், பின்தங்கியவர்களையும், புறக்க ணிக்கப்பட்டவர்களையும் பெற்றுக்கொள்ளகாத்திருக்கிறார். நான் அவரை நேசிப்பதற்கு அதுதான் காரணம்; அவர் என்னை அழைத்தார். இந்த உலகத்தின் தரித்திரமானவர்களையும், இருதயத்தில் தாழ்மையானவர்களையும், கற்றுக்கொள்ள வாஞ்சிக் கிறவர்களையும்... 21. அவர் சகரியாவைக் கண்டுபிடித்தார், அவன் இன்னும் தன்னுடைய உத்தியோகத்தின் கடமையில் - தூபங்காட்டுவதில் உண்மையுள்ளவனாயிருந்தான். சகரியா அந்நாளில் அத்தூபத்தை எரிப்பதற்காக உள்ளே போன போது, இப்பொழுது அவன் ஒரு வயதான மனிதனாக இருந்தான், அவனுடைய மனைவியோ பிள்ளை பெறும் காலத்தை கடந்தவளாயிருந்தாள், அப்பொழுது கர்த்தருடைய தூதன் பலிபீடத்தின் வலது பக்கத்தில் நின்றான். சகரியா திரும்பி அவரைப் பார்க்கும் போது, அது பிரதான தூதனாகிய காபிரியேலாக இருந்தது. பாருங்கள், தேவன் அநேக தூதர்களை அனுப்பலாம், நம்மெல்லாருக்கும் பாதுகாக்கும் தூதர்கள் உண்டு. தேவனுடைய பிள்ளைகள், தேவன்... இயேசு, ‘இந்தச் சிறியவர்களை அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்’ என்று கூறினார். அது உண்மையா? கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக நீங்கள் செய்வதைக் குறித்து கவனமாயிருங்கள். அவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்கினால், உங்களுடைய கழுத்தில் ஒரு கல்லைக்கட்டி சமுத்திரத்தில் அமிழ்த்துகிறது நலமாயிருக்கும் -நலமாயிருக்கும். கவனமாயிருங்கள். பாருங்கள். 22. இப்பொழுது, இது... அவர் அநேக தூதர்களை அனுப்புகிறார், ஆனால் காபிரியேல் மகிமையிலிருந்து இறங்கி வருவதைக் குறித்து நீங்கள் கேள்விப்படும் போது, அது வெறுமனே ஒரு சிறிய காரியம் அல்ல; ஏதோவொரு பெரிய காரியம் சம்பவிக்கும்படி நியமிக்கப்பட்டிருந்தது. காபிரியேல்... இங்கே இப்பொழுது அது உள்ளது. காபிரியேல் கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தான். காபிரியேல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் அறிவிப்பான். ஆமென். அவன் மகிமையில் அவருடைய மகத்துவத்தின் வலது பாரிசத்தில் நின்று கொண் டிருக்கும் பிரதான தூதனாக இருக்கிறான். ஜனங்கள் வெளியே ஜெபித்துக் கொண்டிருக்கையில், இந்த ஆசாரியன் அங்கே நின்று கொண்டு, ஜெபித்துக் கொண்டும், அந்த தூபகலசத்தை அசைத்து தூபங்காட்டிக் கொண்டிருந்தான். மேலும் அங்கே காபிரியேல் நிற்பதைக் கண்டான். அது என்னவொரு உணர்ச்சி! ஆனால் அவன் சகரியாவிடம் கூறினான்; அவன், ‘நீ தேவனிடத்தில் தயவு பெற்றாய், இப்பொழுதும் சகரியாவே, நீ இங்கே இந்த பலிபீடத்தில் ஊழியத்தின் நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்குப் போகும் போது, நீ சீலோவுக்குத் திரும்பிப் போகும் போது, நீ வீட்டிற்குப் போகும் சமயத்தில், உன் மனைவியுடன் இருந்து, அவள் கற்பவதியாகி ஒரு குமாரனைப் பெறப்போகிறாள்’ என்றான். என்னவொரு செய்தி! 23. இப்பொழுது கவனியுங்கள், ஒரு மனிதன் தன்னுடைய சபையின் வழிகளில் மிகவுமாகப் பொருந்தியிருக்கிறான், அவன் ஒரு தூதனுடைய சமுகத்தில் நின்று கொண்டிருந்ததை அறிந்திருந்தும், ‘இக்காரியங்கள் எங்ஙனம் சம்பவிக்கக்கூடும்?’ என்றான். ஏன், வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘அவைகள் சம்பவிக்க முடியாது, என்னுடைய மனைவிக்கு 50 அல்லது 60 வயதாகிறது. ஏன், அவள் பதினேழு பதினெட்டு வயதானவளாக சிறு பெண்ணாக இருந்தது முதற்கொண்டே அவளுடன் வாழ்ந்து வந்துள்ளேன். அவள் பிள்ளை பெறும் வயதைக் கடந்து விட்டாள். இந்தக் காரியங்கள் சம்பவிக்க முடியாது.’ கவனியுங்கள், நான் இதை விரும்புகிறேன். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றும்படி தீர்மானித்து விட்டார். அடுத்த ஞாயிற்றுக் கிழமையில் நான், தெரிந்து கொள்ளுதல் மற்றும் அழைத்தல் என்பதன் பேரில் பேசுவேன். கவனியுங்கள், அவன், ‘நான் தேவனுடைய சமுகத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன், என்னுடைய வார்த்தைகள் அவைகளுடைய நாளில் நிறைவேறும். நீ அதை சந்தேகித்தபடியால், குழந்தை பிறக்கும் நாள் மட்டுமாக நீ ஊமையாயிருப்பாய். நீ அவனுடைய பெயரை யோவான் என்று அழைப்பாய்’ என்றான். 24. அது உண்மையாகவே ஏதோவொன்றாக உள்ளது என்று ஊகிக்கிறேன், இல்லையா? இப்பொழுது கவனியுங்கள். அந்த தூதன் மரித்து விட்டான் என்று நம்புகிறீர்களா? இல்லை, ஐயா, அவன் இந்தப் பிற்பகல் வேளையில் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான். கவனியுங்கள். அதன்பிறகு நாம் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், அவன் ஏன் நீண்ட நேரமாக தங்கியிருக்கிறான் என்று ஜனங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவதை நாம் கண்டுகொள்கிறோம், எனவே அவனைப் பார்ப்பதற்காக வருகிறார்கள், அவன் தன்னுடைய கரங்களால் சைகை காட்டுவதைக் கண்டார்கள். அவன் ஒரு தரிசனம் கண்டிருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவன் வீட்டிற்குப் போகிறான். காபிரியேல் சென்னவிதமாகவே சம்பவித்தது. எலிசபெத் கற்பந்தரித்தாள். அல்லேலூயா. தேவனுடைய வார்த்தை அவ்வாறு கூறினது; அது சம்பவித்தாக வேண்டும். எனவே வயது சென்றவளாயிருந்த எலிசபெத் வருகிறாள், அவளுக்கு ஸ்திரீகளுக்குரிய வழிபாடு கடந்து போய் அநேக வருடங்கள் ஆகியிருக்கலாம்... ஆனால் கவனியுங்கள், அந்த ஆசாரியன் அது சம்பவிக்கும் என்பதை சந்தேகித்தான். அது அதற்கு முன்பாக சம்பவித்திருந்த ஏராளமான திருஷ்டாந்தங்களை அவன் கொண்டிருந்தான். இருப்பினும் அவனுடைய சொந்த காரியத்தில் அவன் அதை சந்தேகித்தான். இப்பொழுது, நீங்கள், ‘இவர் சுகமடைவதையும், அவர் சுகமடைவதையும் நான் காண்கிறேன், ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு அது தெரியாது’ என்று கூறலாம். ஏன், அது உங்களுக்காகவும் கூட. நீங்கள், ‘அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றது முதற் கொண்டு, இவர் மிக அதிகமான சந்தோஷத்தோடு இருக்கிறார் என்று அறிவேன், ஆனால் அண்டை வீட்டார் என்னை கேலி செய்வார்களோ என்று சற்று பயப்படுகிறேன்’ என்று கூறலாம். 25. அண்டை வீட்டார் என்ன கூறுவார்களோ என்று ஏன் கவலைப்படுகிறீர்கள்? தேவன் உங்களை ஒரு கோமாளியாக ஆக்குவதில்லை; அவர் (உங்களை) ஒரு பரிசுத்தவானாக ஆக்குகிறார். தேவன் அதைக்குறித்து என்ன சொல்லுகிறார்? அண்டை வீட்டார் என்ன கூறுகிறார்கள் என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது; அது தேவன் என்ன கூறுகிறார் என்பதாக உள்ளது. ஆமென். நான் ஏற்கனவே பக்திபரவசப்படத் தொடங்கி விட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் பக்திபரவசப்படுகிறேன். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய ஜனங் களை ஆசீர்வதிக்கும்படியாக இந்தப் பிற்பகல் வேளையில் இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஓ, நான் எண்ணிப்பார்க்கிறேன், பிறகு, நான் சகரியாவை எப்படியாகப் பார்க்கிறேன், அவன் அதை சந்தேகித்தான், ஆனால் எலிசபெத் கற்பவதியாகி சிறிது கழிந்து, அவள் ஆறு மாதங்கள் தன்னைத்தானே மறைத்துக் கொண்டாள், அவள் கற்பவதியாகியிருந்தாள், அவள் இந்தப் பிள்ளையைக் கொண்டு வந்தாள். (கற்பவதியாகி) 6 மாதங்கள் கழித்த பிறகு... இப்பொழுது நம்முடைய பார்வையை வேறு ஏதோவொரு இடத்திற்குத் - நாசரேத்திற்குத் திருப்புவோம், நாசரேத் உலகத்திலேயே மிகவும் மோசமான பட்டணமாக இருந்தது, அது கானர்ஸ்வில், ஜெபர்ஸன்வில் அல்லது அவைகளில் எதைக் காட்டிலும் மோசமாக இருந்தது. ஓ, அது பயங்கரமானதாக இருந்தது. 26. இப்பொழுது கவனியுங்கள், நாம் இங்கே ஒரு விதமான சிறு நாடகத்தை கொடுப்போம்; அது திங்கள் கிழமையாக இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். வழக்கமாக, அது ஸ்திரீகளுடைய மோசமான நாளாயுள்ளது. நான் வீட்டிற்குச் சென்றபோது, அது அவ்வாறு இருந்தது; கழுவுவதற்கான தண்ணீர் மற்றும் காரியங்களை நான் நிறைக்க வேண்டியிருந்தது. இந்தப் பிற்பகல் வேளையில் என்னுடைய தாயார் இங்கே இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய சகோதரன் சில நிமிடங்களுக்கு முன்பு இங்கே இருந்ததைக் கண்டேன். அவர்கள் (தாயார்) இங்கிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். நான் வழக்கமாக போய் மரக்கிளைகளை வெட்டிக் கொண்டு, அவைகளை உள்ளே இழுத்து வந்து, அதை தீயில் போட்டு, பழைமையான பெரிய கொதிகலனில் உள்ள தண்ணீரை (wash water)வெளியே வைத்து கொதிக்க வைப்பதுண்டு. அது எவ்விதமாக இருந்தது! என்னே. அவர்கள் (தாயார்) வழக்கமாக பதப்படுத்தப்படும் ஆகாரங்களை (preserves) (உதாரணம்: ஜாம், ஊறுகாய், வற்றல்) சமைப்பதை நினைவுகூருகிறேன். நான் வழக்கமாக அங்கே உள்ளே செல்வேன், எனக்கு வியர்த்து வடியும், உங்களுக்குத் தெரியும், அந்தக் கோடை காலத்தில், அந்த சிறு மஞ்சள் நிற பூசணி வகைகாயும் (gourd), தக்காளியும் மிகவும் அருமையானவையாகவும் நன்றாகவும் உள்ளன, அவைகளிலிருந்து பழக்கூழ், ஊறுகாய், வற்றல் போன்றவை தயாரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். குளிர்ச்சியான ஒரு காலை வேளையில், சூடான பிஸ்கட்டுகளுக்கிடையே அவைகளை வைக்கும்போது அவைகள் அருமையாக இருக்கும் என்று நான் உங்களிடம் சொல்லுகிறேன். அவர்கள் அதை அதில் ஊற்றுவார்கள், நான், ‘ஆ, அம்மா, அந்த நெருப்பு போதுமான அளவு சூடாக உள்ளது’ என்பேன். அவர்களோ, ‘ஓ, அவை இன்னும் போதுமான அளவு சூடாகவில்லை’ என்பார்கள். அவைகள் அப்படியே வெந்து, ஆவியாக வந்துகொண்டிருந்தது. நான், ‘அவைகள் ஏன் போதுமான அளவு சூடாக வில்லை?’ என்று கேட்டேன். 27. அவர்கள், ‘அவை சரியாக வேவதற்கு முன்னால், அவைகள் சத்தத்தோடு கொதிக்க வேண்டியுள்ளது: சத்தத்தோடு கொதித்தல்’ என்றார்கள். ‘அவைகள் கொதிப்பதால் உண்டாகும் சத்தம் ஏற்படுவது வரை விறகை கொடுத்துக்கொண்டேயிரு’ என்றார்கள். சத்தத்தோடு கொதித்து குமிழ் வருதல், காற்று மேலே வருதல், உங்களுக்குத் தெரியும். அது ஒரு நல்ல உவமை என்று நான் எண்ணினேன். ஒரு நல்ல பழமையான பரிசுத்த ஆவி கூட்டத்தை அது எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நீங்கள் கொஞ்சம் விறகை வெட்டி, அவைகள் கொதிக்கத் தொடங்குவது வரை அதைத் தொடர்ந்து தீயில் போட்டுக் கொண்டேயிருங்கள். அதுதான் சரி. முத்திரை போடுவதற்கு ஆயத்தமாகுங்கள். நீங்கள் இரும்பை சூடாக்கி, அதைக்கொண்டு வேறு ஏதோவொன்றை செய்வதற்காக ஆயத்தமாவதற்கு முன்னால், அதைச் சூடாக்கி, அதைப் பட்டறைக் கல்லில் வைத்து, தீப்பொறி அதிலிருந்து வருவது வரை அதை அடித்து, அவளை (இரும்பை) வார்ப்பார்கள். தேவன் முதலாவது ஒரு கூட்டத்தை நடத்த ஆயத்தமாகிறார்; அவர் உங்களுடைய இருதயத்தை அவரை நோக்கித் திருப்பும்படி செய்ய வேண்டியவராயிருக்கிறார். அதன்பிறகு தேவன் உங்களிலிருந்து ஏதோ வொன்றை உண்டாக்கி, தூய்மையான கலப்படமற்ற விசுவாசத்தில் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக உங்களை வார்ப்பிக்கப் போகிறார். 28. இப்பொழுது கவனியுங்கள், மரியாள் கிழக்கத்திய மாதிரியின்படியாக தன்னுடைய தலையில் தண்ணீரை சுமந்தபடி, அந்த சுத்தமான நீரூற்றுகளிலிருந்து வீட்டிற்கு வருவதை என்னால் காண முடிகிறது, அவள் தெருவில் போய்க் கொண் டிருக்கிறாள், எல்லாருமே - தெருவில் யாருமில்லை. அவள் அந்தச் சந்தின் வழியாகக் கடந்து போயிருக்கலாம், அவள் அங்கு தான் வசித்து வந்தாள், அதன் ஓரத்தில் ஒரு சிறு குடிசை இருந்திருக்கலாம்: அவள் மிகவும் ஏழையாகவும், விதவையாயிருந்த தன்னுடைய தாயுடனும் வாழ்ந்து வந்தாள். துணிகளைத் துவைக்கும் நாளாகிய இந்தத் திங்கள் கிழமையில், அவள் பாதையில் நடந்து கொண்டிருந்தாள், ஆனால் அவள் ஒரு கன்னிகையாயிருந்தாள். அந்தப்பட்டணம் எவ்வளவு அருவருப்பானதாக (பாவம் நிறைந்ததாக) இருந்தாலும் காரியமில்லை, அவள் ஒரு கன்னிகையாயிருந்தாள்; அவள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருந்தாள். திடீரென்று ஒரு மகத்தான வெளிச்சம் அவளுக்கு முன்பாகத் தோன்றியது. இந்த வெளிச்சத்தின் கீழாக நின்று கொண்டிருந்தது பிரதான தூதனாகிய காபிரியேலாக இருந்தது (அல்லேலூயா.) ஆமென். அது உங்களை பயப்படுத்தும்படி அனுமதிக்க வேண்டாம், ‘ஆமென்’ என்பதற்கு, ‘அப்படியே ஆகக்கட வது’ என்று அர்த்தமாகும். சரி, அந்த பிரதான தூதன் அங்கே நின்று கொண்டு, ‘வாழ்க மரியாளே, ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ தேவனுடைய பார்வையில் கிருபை பெற்றிருக்கிறாய்’ என்றான். 29. ‘என்ன? தேசத்திலேயே மிகவும் கீழ்தரமான பட்டணத்தை சேர்ந்தவளாகிய நானா? இங்கே இந்தச் சந்திற்குப் பின்னால் ஜீவித்துக் கொண்டிருக்கும் ஏழையான சிறு வயது பெண்ணாகிய நானா? இருப்பினும் நான் தேவனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறேனா?’ ‘ஆம், நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்’ என்றான். இத்தூதனுடைய வாழ்த்துதல், அந்த சிறு கன்னிகையை திகிலடையச் செய்தது, ஒரு ஒளி அவன் மேல் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அந்த வெளிச்சத்தில் நின்று கொண்டு, ‘வாழ்க’ என்றான். அது உங்களை பயமடையச் செய்யும். அது யாரையுமே பயமடையச் செய்யும். இப்பொழுது, அவர் அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரை நோக்கிப்பார்க்கவும், அவரைக் கவனிக்கவும் நான் விரும்புகிறேன். அவன், ‘நீ தேவனிடத்தில் மிகவும் கிருபை பெற்றிருக்கிறாய், நீ ஒரு பிள்ளையைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக’ என்றான். ‘ஏன்,’ அவள், ‘இந்தக் காரியங்கள் எப்படியாகும்?’ என்றாள். ‘பரிசுத்த ஆவி உன்மேல் நிழலிடும். (ஆமென்.) உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்’ என்றான். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? தேவன் ஒரு ஆவியாயிருக்கிறார். சிறிது காலத்திற்கு முன்னால், நான் ஒரு நபரிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர், ‘பிரசங்கியாரே, அது சத்திய மென்று நீர் உண்மையாகவே விசுவாசிப்பதில்லையா?’ என்று கேட்டார். ‘ஆம், நான் விசுவாசிக்கிறேன்’ என்று சொன்னேன். 30. அவர், ‘இப்பொழுது, கவனியும், அது சற்று முட்டாள் தனமாக இருக்கிறதே, யோசேப்பு இந்த ஸ்திரீயுடன் - அந்த பெண்ணுடன் போய்க் கொண்டிருந்தான்’ என்றார். அவன் மனைவியை இழந்தவன், அவனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர், ‘இப்பொழுது, கவனியும், அவன் அந்த ஸ்திரீயோடு கூடபோய்க் கொண்டிருந்தான். அங்கே சற்று தவறாயுள்ளது என்று நம்புகிறேன், இல்லையா?’ என்றார். நான், ‘இல்லை, ஐயா. அவர் பரிசுத்தமான தேவகுமாரனாயிருந்தார், அவர் கன்னிப் பிறப்பின் மூலம் பிறந்தார் என்று நான் விசுவாசிக்கிறேன்’ என்றேன். ‘அது எங்ஙனம் இருக்கக்கூடும்?’ என்று கேட்டார். 31. அந்த மனிதனுக்கு தேவனிடத்தில் விசுவாசமில்லை என்பதைக் காண்கிறோம். மேலும் அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, அது எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் மாறுபட்டுள்ளது; அது அவ்வாறு சம்பவித்திருக்க முடியாது. கவனியும், கோதுமையானது மகரந்த சேர்க்கை நடைபெறாவிட்டால் அது வளராது, சோளமும் அவ்வாறே வளராது. ஆண் பெண் இருவருமே இல்லாமல் எதுவுமே தன்னைத்தானே பிரதியுற்பத்தி செய்ய முடியாது. ஒரு மரம் கூட நடப்பட்டு, மாறுதலடையவும் மற்ற காரியங்கள் சம்பவிக்கவும் வேண்டியுள்ளது. தேனீக்கள் ஆண் மற்றும் பெண்ணை உண்டாக்கும்பொருட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மகரந்த சேர்க்கையைக் கொண்டுவருகிறது, அல்லது அவைகள் வளராது. அது எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் எதிரானது’ என்றார். நான், ‘ஆனால் இது விஞ்ஞானத்தையே சிருஷ்டித்தவரான தேவனாயுள்ளது’ என்றேன். அவர், ‘அது அவ்வாறு இருக்க முடியாது’ என்றார். நான், ‘நான் ஒரு காரியத்தை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். தேவன் ஒருவர் உண்டென்று நீர் விசுவாசிப்பதில்லையா?’ என்று கேட்டேன். அவர், ‘இல்லை, ஐயா. எந்த கன்னிப்பிறப்பிலும் எனக்கு விசுவாசமில்லை; எப்பொழுதுமே அப்படிப்பட்ட காரியம் இருந்தது மில்லை, ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை, நான் அதை விசுவாசிப்பதில்லை. அந்த மனிதராகிய யோசேப்பு தான் அவருடைய தகப்பனாக இருந்தார்’ என்றார். 32. நான், ‘நான் ஒரு காரியத்தை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். அப்படியானால் அது ஒரு மனிதனைப் பொறுத்த வரையில் முற்றிலும் கூடாத காரியம் என்றும் மகத்தான சிருஷ்டிகரான தேவனுக்கு... அது முழுவதும் கூடாத காரியம் என்றும் என்னிடம் கூற விரும்புகிறீரா?’ என்றேன். அவர், ‘அங்கே அப்படிப்பட்ட ஒரு காரியம் கிடையாது’ என்றார். நான், ‘கவனியும், சற்று என்னைப் பின்தொடர்ந்து வாரும். இந்தக் குழந்தையைக் கொண்டு வருவது சிருஷ்டிகரான தேவனால் கூடாத காரியம் என்று நீர் நம்புகிறீர். அவர் ஒரு பூமிக்குரிய தாயைக் கொண்டிருந்தார் என்று நீர் ஒப்புக் கொள்கிறீர், நானும் கூட அதை ஒப்புக் கொள்கிறேன். நல்லது, ஆனால் அவருக்கு பூமிக்குரிய ஒரு தகப்பன் இல்லாவிட்டால், ஒரு குழந்தையைக் கொண்டு வருவது, அவரில்லாமல் கூடாத காரியமாகும்’ என்று கூறினேன். அவர், ‘அது சரியே’ என்றார். 33. நான், ‘அப்படியானால் உம்மிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், தகப்பனோ தாயோ இல்லாமல் முதலாவது மனிதன் எப்படி இங்கே வந்தான்? அவன் தலைப்பிரட்டையாகவே (தவளையாக வளர்ச்சியடையும் நீண்ட வால் கொண்ட உயிரி - மொழிபெயர்ப்பாளர்.), தவளைக் குஞ்சாகவோ, குரங்காகவோ, நீங்கள் அவனை அழைக்க விரும்புகிறபடி எதுவாகவோ இருக்கட்டும், அவன் எப்படி இங்கே வந்தான்? நீர் கூறினபடி, அவன் தகப்பன் தாய் இருவரையும் கொண்டிருக்க வேண்டுமே’ என் றேன். அது சரியே. நான், ‘அவனுடைய தகப்பனும் தாயும் யார்?’ என்று கேட்டேன். இந்நாளுக்கு அவர் எனக்கு பதில் கூறவில்லை. அவரால் பதிலளிக்க முடியவில்லை. தேவன் இந்தப் பிள்ளையை உண்டாக்கினார். ஆம், ஐயா. ஆணிடமிருந்து இரத்த உயிர் அணு வருகிறது என்று நான் நம்புகிறேன். அது உண்மை. நாம் அதை அறிவோம். இங்கேயிருக்கும் ஜனங்களாகிய உங்களில் அநேகர் விவசாயிகளாய் இருக்கிறீர்கள். உங்களுடைய பெட்டைக் கோழி கோடை காலம் முழுவதும் முட்டையிடலாம். ஆனால் அவள் ஆணோடு (சேவல் கோழியோடு – மொழிபெயர்ப்பாளர்.) சேரவில்லையென்றால், அவைகள் ஒருபோதும் குஞ்சு பொரிக்காது. அது சரியே. இப்பொழுது, பறவைகள் தங்களுடைய கூட்டைக் கட்டி - தாய்ப் பறவை வெளியே மரத்தில் ஒரு கூட்டைக் கட்டி, கூடு முழுவதுமாக முட்டைகளையிட்டு, அதைச் சுற்றிலும் ஆண்பறவை இல்லையென்றால், அவள் கூட்டில் உட்கார்ந்து, அந்த முட்டைகளை அடைகாத்து, அம்முட்டைகளை மீண்டும் மீண்டும் திருப்பிப் போட்டு, அவளால் பறப்பதற்கு கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையையடைந்து, கூட்டை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்கிறாள். ஆனால் அவள் ஆண் பறவையுடன் சேரவில்லையென்றால், அவைகள் கூட்டிலேயே கிடந்து அழுகிப் போகும். அவைகள் பொரிக்காது. ஏனெனில் ஜீவ கிருமி ஆணிடமிருந்தே வருகிறது. 34. இங்கே சுற்றிலும் நீங்கள் பெற்றிருக்கிற, இந்தப் பழைய குளிர்ந்து போன சடங்காசாரமான சபைகளில் சிலவற்றை அது என் ஞாபகத்தில் கொண்டு வருகிறது: கூடு நிறைய முட்டைகளைக் கொண்டிருக்கின்றனர், நீங்கள் அப்படியே அந்த டீக்கன்மார்களை அழைத்து, சுற்றிலுமுள்ள அவர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம்...?... அந்தக் கூட்டைக் கிழித்துப் போட்டு வேறு ஏதோவொன்றைப் பெற்றுக் கொள்ளுவது மிகவும் நல்லது. அவர் களுக்கு தெய்வீக சுகமளித்தலில் விசுவாசமில்லை; அவர்களுக்கு தேவனிடத்தில் விசுவாசமில்லை. ஜீவனுடைய தொடுதலைப் பெற அவர்கள் அந்த ஆணோடு ஒருபோதும் சேர மாட்டார்கள், அது சரியே. அதுவே சத்தியமாயுள்ளது. அந்தக் கூட்டை வெளியே எறிந்து விட்டு, மீண்டும் தொடங்குவது நல்லது. அது சரியே. எவ்வளவு டீக்கன்மார் இருக்கிறார்கள் என்பது காரியமில்லை, நீங்கள் அவனை மெருகூட்டி, இது, அது அல்லது மற்றது என அவனை அழைத்து, அல்லது முதுகில் தட்டிக் கொடுத்து, அல்லது சபை புஸ்தகத்தில் அவனுடைய பெயரை எழுதுகிறீர்கள், அவர்கள் மறுபடியுமாக பிறக்கும் மட்டும், இன்னும் பாவத்திலும் அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயிருக்கின்றனர். ஆம், ஐயா. அது உண்மை. 35. இப்பொழுது திரும்பவும் கவனியுங்கள், துரிதமாக. பிதாவாகிய தேவன், ஆவியானவர் அந்த சிறு கன்னிகையின் மேல் நிழலிட்டு, சகலத்தையும் சிருஷ்டித்த பிதாவாகிய தேவன் இரத்த உயிரணுவை அந்த கருப்பையில் – அந்த ஸ்திரீயினுடைய கருப்பையில் உண்டாக்கி, கிறிஸ்து இயேசுவாகிய குமாரனை கொண்டு வந்தார், அவரே பூமியில் தேவனுடைய கூடாரமாக இருந்தார். ஆமென். அப்படியானால் நாம் மாம்சீக உறவின் இரத்தத்தினால் (sexual blood) இரட்சிக்கப்படவில்லை, ஆனால் நாம் சிருஷ்டிக்கப்பட்ட இரத்தத்தினால் – தேவனுடைய சொந்த இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கல்வாரி சிலுவையில் சிந்தின இரத்தம் அவரே. அதன் காரணமாகத்தான் நான் இரட்சிப்பிலும் தெய்வீக சுகமளித்தலிலும் விசுவாசம் கொண்டுள்ளேன், ஏனெனில் கல்வாரி சிலுவையில் அவருடைய குமாரனுடைய இரத்த நாளங்களிலிருந்து ஊற்றப்பட்டது தேவனுடைய சொந்த இரத்தமாக இருந்தது. ஆமென். அதன் காரணமாகத்தான் நாங்கள் எதிர்ப்புகளை எதிர் கொண்டு நின்று, ‘அதுதான் சரி!’ என்று கூற முடிகிறது. நீங்கள் அடிப்படை சத்தியங்களுக்கு திரும்பிச் சென்று, அது என்னவென்று கண்டு கொள்வீர்களானால், நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். நாம் தேவனுடைய இரத்தத்தினாலே இரட்சிக்கப்பட்டிருக் கிறோம். 36. இப்பொழுது, இந்தச் சிறு கன்னிகை முழுவதுமாக பரவசமடைந்தாள். கவனியுங்கள், இங்கே உள்ள காரியம் தான் நான் மரியாளைக் குறித்து விருப்பம் கொள்ளச் செய்கிறது. ஆமென். சகரியாவைப் போல, அந்தப் பிரசங்கியாரைப் போல சந்தேகப்படுவதற்குப் பதிலாக, அவள், ‘இதோ, நான் ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது’ என்றாள். அவன் செய்ததைப் போல, அவள் அதெல்லாவற்றையும் புரிந்து கொள்ளும்படி முயற்சிக்கவில்லை. அவன், ‘எப்படியாகும், இப்பொழுது, கவனியும், என்னுடைய மனைவி வயது சென்றவள்’ என்று கூறினான், இதைப் போன்ற மற்றவைகளைக் கூறினான். நம்மிடம் ஏராளமான திருஷ்டாந்தங்கள் உள்ளன. ஆலயத்திலிருந்த ஆகாரைக் கவனியுங்கள். மேலும் சாராளைக் கவனியுங்கள். அநேக பண்டைய கால ஸ்திரீகள் தேவனுடைய ஆசீர்வாதங்கள் தங்கள் மேல் வந்ததன் காரணத்தால் தான் (பிள்ளை களைப் பெற்றனர்) பிள்ளைகளைக் கொண்டிருந்தனர். நம்மிடம் ஏராளமான திருஷ்டாந்தங்கள் உள்ளன. ஆனால் அவன் – ஒருபோதும் சம்பவித்திராத ஏதோவொன்றை அவள் விசுவாசிக்க வேண்டியிருந்தது. நல்லது, மரியாளைக் குறித்து நான் விரும்புவது இங்கே தான் உள்ளது. அவள் ஜீவனை உணரும் முன்பே, எந்த உடல் சார்ந்த வெளிப்படையான உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவளுடைய சரீரத்தில் ஒரு காரியம் நிற்பதற்கு முன்பே, அவள் ஜீவனையோ அல்லது எதையுமோ உணருவதற்கு முன்பே, அவள் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப்போகிறாள் என்பதைக் குறித்து சாட்சி கூறத் தொடங்கினாள். அல்லேலூயா. தேவனை அவருடைய வார்த்தையில் எடுக்கும் இன்னும் அதிக மான சில மரியாள்களை தேவன் நமக்கு அருளுவாராக. தேவன் தம்முடைய தூதன் மூலமாக அவ்வாறு கூறியிருந்தார், வேறு ஒவ்வொரு காரியமும் நடந்தாலும் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை, அவள் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறாள், ஏனெனில் அவள் தேவனை அவருடைய வார்த்தை யில் எடுத்தாள். ஆமென். 37. இந்தப் பிற்பகல் வேளையில் இங்கே இந்தச் சபையில் நாம் அம்மாதிரியான ஜனங்களைக் கொண்டிருந்தோமானால், இங்கே நம் மத்தியில் ஒரு வியாதிப்பட்ட நபரும் இருக்க மாட்டார்கள். தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து களிகூரத் தொடங்குங்கள். அவள் சுற்றிலும் சென்று ஒவ்வொருவரிடமும், ‘ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறேன்’ என்று கூறிக் கொண்டிருந்தாள். ‘உனக்கு குழந்தை இருக்கப்போகிறது என்று எப்படி உனக்குத் தெரியும்?’ ‘தேவன் அவ்வாறு கூறினார்.’ ஒரு கன்னிகை... அல்லேலூயா. ஆமென். நான் அதை விரும்புகிறேன். சரி. அவள் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து களிகூரத் தொடங்கினாள். அவளால் பொறுமையாக அமைதியாக இருக்க முடியவில்லை; அவள் யாரோ ஒருவரிடம் சென்று அதை சொல்ல வேண்டியிருந்தது. தேவனுடன் எப்பொழுதாவது தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரும் வேறு யாரிடமாவது அதைச் சொல்ல வேண்டும். ஆம், ஐயா. அவள் தொலைதூரத்துக்குப் போனாள். எலிசபெத்தைக் குறித்து தூதன் அவளிடம் கூறினான். எலிசபெத்து அவளுடைய நெருங்கிய இனத்தாளாயிருந்தாள் (first cousin). அவள் எலிச பெத்தைக் காண போக வேண்டியிருந்தது. எனவே நாசரேத்து தெருக்களின் வழியாக யூதேயாவுக்குள் சென்று, அவளுக்கு சம்பவிக்கப் போவதைக் குறித்து எலிசபெத்திடம் கூறும்படியாக அவளைக் காண மேலே அந்த மலை தேசத்திற்குப் போனாள். எனவே எலிசபெத்து ஏற்கனவே தாயாகியிருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாள்; அவளுடன் ஆறு மாதங்கள் இருந்தாள். இவ்வாறாக அவர்கள் ஒன்றாக மகிழ்ச்சியான நேரத்தைக் கொண்டிருக்கின்றனர். 38. இப்பொழுது கவனியுங்கள், மரியாள் எலிசபெத்தை சந்திக்கும்படி வருவதை என்னால் காண முடிகிறது, அவளை சந்திக்கும்படி எலிசபெத்து வெளியே வருகிறாள். அவள் வருவதை இவள் கண்டாள், இவள் ஓடிச் சென்று தன்னுடைய கரங்களை அவளைச் சுற்றிலும் போட்டு, அவளைக் கட்டித் தழுவி, அவளை முத்தமிடத் தொடங்கினாள். அதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ‘ஓ, எலிசபெத்தே, நான் உன்னைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.’ ‘மரியாளே, உன்னைக் காண்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ அந்த விதமாகத்தான் அவர்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்தினார்கள். அவர்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருந்தனர். நீங்கள் இப்பொழுது இனிமேலும் அதைக் காணமாட்டீர்கள். அதெல்லாம் ஏறெக்குறைய மறைந்து போய் விட்டது, அன்பு. சகோதரனே, உங்களுக்குத் தெரியும், அது பயங்கரமாக இல்லையா? ஜனங்கள் இனிமேலும் ஒருவர் மற்றவருக்காக அக்கறை கொள்வதில்லை. ஏன், நாம் தேசத்தில் வெளியே இருந்த போது, நமக்கு பண்ணை நிலங்கள் இருந்தன, அப்போது அது வழக்கமாக இருந்தது, யாரோ ஒரு அண்டைவீட்டார் வியாதிப்படும் போது, ஏன், நாம் அங்கே சென்று அவர்களுடைய தானியத்தை கொய்து அல்லது – அல்லது அந்த மரத்தை வெட்டி அதை உள்ளே கொண்டு வந்து, அவர்களுக்கு ஒத்தாசையாய் இருக்கக்கூடிய எதையாவது செய்தோம். ஆனால் அவர்கள் இன்மேலும் அதைச் செய்ய மாட்டார்கள். உங்களுடைய அண்டை வீட்டார் மரிப்பார்களானால், அதை நீங்கள் அறியக் கூடிய ஒரே வழி என்னவெனில், நீங்கள் செய்தித்தாளை வாசிப்பதன் மூலமே. உங்களுக்கு அதைக் குறித்து எதுவும் தெரியாது. சகோதர சிநேகம் முடிந்து விட்டது. அது சத்தியமில்லையா? 39. நான் அன்றொரு நாள் யாரோ ஒருவருடன் ஒரு பக்கமாக பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே தெருவில் ஒரு ஸ்திரீ போய்க் கொண்டிருந்தாள், அவள் என்னுடைய மனைவியை அறிந்து கொண்டாள். எனவே அவள், ‘ஹலோ’ என்றாள். நான், ‘நீ அவளிடம் பேசினாயா?’ என்றேன். அவள், ‘ஆம்’ என்றாள். நான், ‘நீ பேசினதை நான் கேட்கவில்லையே’ என்றேன். அவள், ‘நல்லது, நான் திரும்பிப் பார்த்து புன்னகை செய்தேன்’ என்றாள். நான், ‘அது அதுவல்ல, அது கொஞ்சம் முட்டாள்தனமான அசட்டு சிரிப்பாக உள்ளது. நீ போய் கொண்டே, ‘ஹாய்’ என்று சொல்லுகிறாய். நான் அதை விரும்பவில்லை’ என்றேன். நான் இங்கே மியாமிக்கு ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தேன், சகோதரன் போஸ்வர்த், ஏதோவொரு கோமாட்டி (சீமாட்டி -பிரபு அல்லது சீமானின் மனைவி - மொழிபெயர்ப்பாளர்) (Duchess) அங்கே இருந்தாள், அவள் அங்கே கூடாரத்தின் சிறு தொங்கலுக்குப் பின்னால் இருந்தாள். சகோதரன் போஸ்வர்த், ‘சகோதரன் பிரன்ஹாமே, நாம் இவ்விடத்தைக் கொண்டிருக்கும்படி அனுமதியளித்த கோமாட்டி உம்முடைய கரங்களைக் குலுக்க விரும்புகிறாள்’ என்றார். நான், ‘நல்லது இப்பொழுது, அவள் மற்றவர்களைக் காட்டிலும் மேலானவள் அல்லவே’ என்றேன். பாருங்கள்? நான், ‘அவள் வெறுமனே ஒரு ஸ்திரீயாக இருக்கிறாள்’ என்றேன். அவர், ‘நல்லது, அவள் – அவள் உம்மிடம் பேச முடியாதென்று நான் அவளிடம் கூறி விட்டேன், ஆனால் நாம் இதைப் போன்ற இடத்தின் வழியாகப் போவோமனால், நல்லது, அவள் உம்முடைய கரத்தைக் குலுக்கக் கூடும்’ என்றார். நான், ‘நல்லது, அது உங்களைப் பொறுத்தது’ என்றேன். 40. இவ்வண்ணமாக, ஞாயிறு பிற்பகலில், பிரசங்க ஆராதனைக்குப் பிறகு, நான் அங்கே பின்னால் நடந்து சென்றேன், நீங்கள் ஒரு காய்ச்சலைத் தணிக்கும் மருந்துப் பெட்டியில் (aspirin box) வைக்கக்கூடிய போதுமான ஆடைகள் அவளிடம் இருந்தன. மேலும் அவள்... இங்கே அவள் வருகிறாள், ஒரு குச்சியில் ஒரு ஜோடி கண்ணாடிகள் அவளிடம் இருந்தன. அதை இவ்விதமாகப் பற்றிப் பிடித்திருந்தாள். இப்பொழுது, நல்லதும் நலமுமான காரியம் உங்களுக்குத் தெரியும், அவளிடமிருந்து இவ்விதமாக தூரத்தில் இருக்கும் கண்ணாடிகள் வழியாக யாராலும் பார்க்க முடியாது, அதை இவ்விதமாகப் பற்றிப் பிடித்திருந்தாள். இங்கே அவள் இதைப் போன்று தன்னுடைய தலையை உயர்த்தினவளாய் அந்த கண்ணாடிகள் வழியாக பார்த்துக் கொண்டு, அவளுடைய கரங்கள் முழுவதுமாக வளையல்களை அணிந்து கொண்டு, பிசாசினுடைய சேணத்தின் மேல் இருக்கும் குதிரை சேண வளையம் போன்ற காதணிகளைத் தொங்க விட்டுக் கொண்டு வருகிறாள்...?... அவளுடைய கண்களில் கண்ணாடிகளுடன் இதைப்போன்று அங்கே நடக்க ஆரம்பித்து, அவள், ‘நீங்கள் டாக்டர். பிரன்ஹாமா?’ என்று கேட்டாள். நான், ‘இல்லை, சீமாட்டியே. நான் சகோதரன் பிரன்ஹாம்’ என்றேன். அவள், ‘நல்லது, டாக்டர். பிரன்ஹாம், நான் உங்களை சந்திப்பதில் இனிமையடைகிறேன்’ என்றாள். இதைப்போன்று பெரிய கொழுத்த கரம் அவளுக்கிருந்தது. நான் அதைப் பிடித்தேன்; நான் அவளிடம், ‘இங்கே இறங்கி வாருங்கள், அதற்குப்பிறகு நான் உங்களை மீண்டும் சந்திக்கும் போது உங்களை அறிந்து கொள்வேன்’ என்று கூறினேன். 41. அந்த எல்லாக் காரியங்களையும் அணிந்திருந்தாள். அதில் எதுவுமேயில்லை. அது முட்டாள்தனம். நிச்சயமாக, எப்படி யாயினும் நீங்கள் யார்? 50 டாலர் பெறுமானமுள்ள கோட்டை அணிந்து கொண்டு, மூக்கை மேலே உயர்த்திக் கொண்டு, சுற்றித் திரிகிறீர்கள், மழை பெய்தால், உங்களை மூழ்கடித்துக் கொன்று போடும், நீங்கள் ஏதோவொன்றாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறீர்கள். நீங்கள் ஆறு அடி மண் தான். உங்க ளுடைய ஆத்துமா இரட்சிக்கப்படவில்லையென்றால், நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள்! அதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது. ஆனால் அதுதான் இன்றைய உலகமாக உள்ளது. ‘ஓ, நாம் யாரோ ஒருவராக இருக்கிறோம். நாம் எங்கேயோ சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.’ அப்படியிருக்க கேலி செய்து, ஜனங்களைப் பரிசுத்த உருளையர்கள் என்று அழைக்கிறீர்கள். ஓ, என்னே. மரியாள் ஓடிச் சென்று எலிசபெத்தைப் பற்றிக் கொண்டு, அவர்கள் ஒன்றாக தங்களுடைய கரங்களை ஒருவர் மற்றவரைச் சுற்றிலும் போட்டுக் கொள்வதை என்னால் காண முடிகிறது. மரியாள், ‘ஓ, எலிசபெத்தே, நான் உன்னைக் காண்பதில் மிகவும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைகிறேன்’ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவள் தாயாகியிருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியும். அவள், ‘நீ ஒரு தாயாகியிருக்கிறாய் என்பதை நான் கேள்விப்பட்டேன்’ என்றாள். இப்பொழுது, இதை ஒரு நிமிடம் நாடகக் காட்சியில் அமைப்போம். 42. எலிசபெத், ‘ஆம், மரியாளே, அது சரிதான், ஆனால் எனக்கு கவலையாயுள்ளது’ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ‘ஏன்?’ ‘ஏன், அது – அது ஒரு தாயாகிய என்னிடம் ஆறுமாதங்களாக இருக்கிறது, இதுவரையிலும் அங்கே எந்த ஜீவனும் இல்லை.’ இப்பொழுது, அது இயல்பை விட முற்றிலும் குறைவாக உள்ளது: ஏறக்குறைய இரண்டு, மூன்று மாதங்கள். எனவே அது, ‘ஆறு மாதங்களாகியும் ஜீவனில்லை, எனக்கு அதைக் குறித்து கவலையாயுள்ளது’ என்றது. ‘ஏன்,’ அவள், ‘எனக்கு கவலையில்லை. இப்பொழுது கவனி, நீ ஒரு தாயாகப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும், ஏனெனில் தூதன் அவ்வாறு என்னிடம் கூறியிருக்கிறான். ஆனால் தூதன் என்னிடமும் கூட தோன்றினான். எந்த மனிதனையும் அறியாமலேயே நான் ஒரு குமாரனைக் கொண்டிருக்கப்போகிறேன் என்று கூறினான். நான் அவருடைய பெயரை இயேசு என்று அழைக்கப் போகிறேன்’ என்றாள். ஒரு மனித ஜீவனின் சாவுக்குரிய உதடுகளிலிருந்து இயேசு என்ற நாமம் முதலாவதாக புறப்பட்டு போன உடனே, அந்த தாயின் கருப்பையிலிருந்த அந்த மரித்துப்போன சிறு குழந்தை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டு, சந்தோஷத்தால் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. அது சரியே. சகோதரனே! ஒரு ஸ்திரீயின் கர்ப்பபையில் இருந்த ஒரு மரித்துப் போன குழந்தையை அது சந்தோஷத்தால் துள்ளிக் குதிக்கச் செய்யுமானால், அது மறுபடியும் பிறந்த ஒரு சபைக்கு என்ன செய்ய வேண்டும்? நிச்சயமாக. ஒரு சாவுக்குரிய உதடுகள் வழியாக இயேசு என்ற நாமம் முதலாவது பேசப்பட்ட போது... ஆமென். பிசாசு அலறி கூச்சலிட்டு, வெளியேறுவதையும், பாவிகள் கதறி அழுவதையும் குறித்து பேசுகிறீர்கள்... அந்த நாமம், அதை நீங்கள் தூக்கி எறிய முடியாது, அரைகுறையாக அதை கனப்படுத்த முடியாது, அப்போதும் அதில் வல்லமை உண்டு, நீங்கள் அதை விசுவாசித்து, அதை கனப்படுத்தியாக வேண்டும். தேவன் அதை அருளுவார். 43. இப்பொழுது, ‘நீ வாழ்த்தினவுடனே’ என்றாள், ‘பாக்கியவதி...’ என்றாள், பரிசுத்த ஆவியானவர் அந்த தாயாரிடம் கடந்து சென்றார். ‘என் ஆண்டவருடைய தாயார் வந்தது எதினால் கிடைத்தது? உன்னுடைய வாழ்த்துதல் என் காதில் விழுந்தவுடனே, வயிற்றிலுள்ள என் பிள்ளை களிப்பாய் துள்ளிற்று’ என்றாள். புதிதான ஏதோவொன்று சத்தமிடுவதைக் குறித்து பேசுகிறீர்கள், ஊ, ஏன், சத்தமிடும் மார்க்கம் தான் உலகத்திலேயே பழைமையான மார்க்கமாகும். ஏன், உலகத்தோற்றத்திற்கு முன்பே –ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னே, தேவன் ஒரு நாள் யோபிடம் கேட்டார், அவர், ‘நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் கெம்பீரித்தார்களே’ என்றார். புதிதான ஏதோவொன்றைக் குறித்து பேசுகிறீர்கள், பழைமையான காலத்தின் புதிதான ஒரு காரியத்தை நாம் பெற்றிருக்கிறோம். அவ்வளவுதான். நிச்சயமாக. கெம்பீரித்தல், என்னவொரு தருணம், என்னே... 44. இந்த யோவான் பிறந்த போது, அது எப்படிப்பட்ட ஒரு குழந்தையாக இருக்கப் போகிறது? என்னே, அவன் தன்னுடைய கழுத்துப்பட்டையை பின்னால் திருப்பாமல், தினமும் மூன்று வேளை பொரித்த கோழியைக் கொண்டிருக்காமலும், அவன் வனாந்தரத்திற்கு வெளியே வருவதை நான் காண்கிறேன். இல்லை, ஐயா. அவன் ஒரு பழைய ஆட்டுத்தோலை தன்னைச் சுற்றிலும் போர்த்துக் கொண்டு, ஒரு ஒட்டகத் தோலை வார்க்கச்சையாக கட்டிக் கொண்டு, அவன் மனந்திரும்புதலைப்பிரசங்கித்தான். சுற்றிலுமுள்ள பிரதேசம் முழுவதையும் கலக்கிக் கொண்டிருந்தான். அவன் கிறிஸ்துவைப் பிரசங்கித்தான். மேலும் சகோதரனே, கிறிஸ்து அதனுடைய எளிமையில், இன்னும் அதனுடைய வல்லமையில் பிரசங்கிக்கப்படும் போது, ஜீவனுள்ள தேவனாகிய கிறிஸ்து ஜனங்களிடம் யதார்த்தத்தைக் கொண்டு வரும் போது, அது ஒவ்வொரு தடவையும் தேசங்களைக் கலக்கும். நிச்சயமாக, அது எப்போதுமே அவ்வாறு இருந்திருக்கிறது. எல்லாக் காலங்களிலும் தேவனுடைய வல்லமையானது அவருடைய ஜனங்களோடு எப்போதுமே இருந்திருக்கிறது. கடந்த இரவு இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எண்ணிப் பார்த்தேன், அவர்கள் ஒரு இடத்துக்கு வந்தபோது - சில சமயங்களில் நாம் குழப்பமடைகிறோம் என்பதை நான் அப்போது எண்ணிப் பார்த்தேன். அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வந்த போது, அவர்கள் குழப்பமடைந்தனர். தேவன் அவர்களுக்காக ஒரு வழியை உண்டாக்கினார். அவர்கள் சிவந்த சமுத்திரத்தில் இருந்த போது, தேவன் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தார். 45. அவர்களைக் கவனித்துப் பாருங்கள், அவர்கள் உணவு சமைக்க பயன்படும் சிறிய கொள்கலன்கள் முழுவதும் அப்பத்தை எடுத்து, தங்களுடைய தலையின் மேல் சுமந்து கொண்டு வந்ததைத் தவிர வேறொன்றுமில்லாமல் அந்த தேசத்தை விட்டு வெளியே வந்தனர். உங்களுடைய கஞ்சத் தனமான (அற்பத்தனமான) எல்லாவற்றையும் விட்டுவடுவது வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் இருக்கிறவித மாகவே வாருங்கள். நீங்கள் விரும்புகிற வழி அதுதான். ‘நல்லது, நான் இதிலிருந்து, இது மற்றும் அதிலிருந்து விடுபடும்போது, நான் வருவேன்’ என்று கூறலாம். இப்பொழுது நீங்கள் இருக்கிற விதமாகவே வாருங்கள். கவனியுங்கள், அவர்கள் மறுகரையை அடைந்த போது, அப்பமானது தீர்ந்து போயிற்று. தேவன் எப்போதுமே ஒரு வழியை அருளுபவர். அந்த இரவில் அவர்கள் படுக்கைக்குப்போன போது, தீர்க்கதரிசி வெளியே சென்று ஜெபிப்பதை என்னால் காண முடிகிறது. அடுத்த நாள் காலையில், அவர்கள் தூக்கத்தை விட்டு எழுந்த போது, அவர்கள் சுற்றிலுமுள்ள எல்லா திசைகளிலும் தரையின் மேல் நோக்கிப் பார்த்தனர், அங்கே உறைந்த பனிக்கட்டி பொடியைப் போன்று மன்னா தரையின் மேல் எங்கும் கிடந்தது. அது தேன் மற்றும் பணிகாரத்தைப் போன்று ருசியாயிருந்தது. அவர்கள் வெளியில் சென்று அதை எடுத்து புசிக்கத் தொடங்கினர். ஓ, அது அற்புதமாக இருந்தது, அது தான் மன்னா. அது இன்றுள்ள நம்முடைய மன்னாவிற்கு மிகவும் அழகான மாதிரியாயுள்ளது, முழு வனாந்திர பிரயாணத்திற்கும். அவர்களைக் கவனியுங்கள், அவர்களுக்குத் தேவையான மன்னாவை தேவன் அருளினார். அப்போது அவர்கள்... கன்மலையின் தேனைப் போன்று ருசியாயிருந்தது என்று அவர்கள் கூறினர். தேவனிடமிருந்து பரலோகத்தை விட்டு இறங்கி வந்த பரலோக மன்னாவை நீங்கள் எப்பொழுதாவது ருசித்துப் பார்த்ததுண்டா? நான் எப்பொழுதும் ருசித்துப் பார்த்த எந்த தேனைக் காட்டிலும் இனிப்பாக உள்ளது. 46. எனவே, பிறகு நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்ன வெனில், பங்கீடு செய்து கொடுக்க வேண்டியதில்லை என்று ஜனங்கள் எண்ணினர், எனவே அவர்கள் வெளியில் சென்று அவைகள் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்படியாக போதுமானதைப் பெற்றனர். அந்தவிதமாகத்தான் ஜனங்கள், ஈஸ்டரின் போது மட்டும் சபைக்குப் போய், அடுத்த வருடம் வரைக்கும் போதுமானதை பெற்றுக் கொண்டதாக எண்ணுகின்றனர். சமீபத்தில், ஒரு குறிப்பிட்ட பெரிய சுவிசேஷ சபையில், ஒரு மேய்ப்பர் என்னிடம் கூறினார்; அவர், ‘சங்கை பிரன்ஹாம் அவர்களே, நான் எப்போதுமே என்னுடைய ஜனங்களை மிகவும் சந்தோஷமான கிறிஸ்துமஸ் சமயத்திலோ, சந்தோஷமான புது வருட நேரத்திலோ, ஈஸ்டரின் போதோ அழைக்கிறேன். நான் அடுத்த ஈஸ்டர் வரை அவர்களை அதற்கு மேல் பார்ப்பதேயில்லை’ என்றார். ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? அங்கே ஜனங்கள் அதைச் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய காரியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதை கண்டுகொண்டனர். அவர்கள் அவ்விதமாகவே அதைத் தொடர்ந்து பெற்றனர், எப்படியாயினும் ஜனங்களில் சிலர் போய் அதைச் செய்தனர். அது கெட்டுப் போனதை அவர்கள் கண்டு கொண்டனர். அதற்குள் வால்புழுக்கள் (Wiggletails) வந்து, அது கெட்டுப்போயிற்று. 47. இன்று பெந்தெகோஸ்தேயினரில் கூட அதிகமான நம்முடைய அனுபவங்கள் அந்த விதமாகத்தான் உள்ளன: அதில் ஏராளமான வால்புழுக்களைப் பெற்றிருக்கிறோம். அந்த காரியத்தை விட்டு விடும்படியான நேரம் இதுவே. நாம் 30 வருடங்களுக்கு முன்பு என்ன செய்தோம் என்பதல்ல, நாம் இன்று என்ன செய்கிறோம் என்பது தான் அது. இன்று தேவனோடுள்ள அனுபவம் எவ்வாறு உள்ளது? கெட்டுப்போயிற்று... ‘நல்லது, நான் இருபது வருடங்களுக்கு முன்பு அற்புதமான அனுபவத்தைக் கொண்டிருந்தேன்’ என்று கூறலாம். இப்பொழுது அதைக் குறித்து என்ன? ‘நல்லது, நான் நீண்ட காலத்திற்கு முன்பு அவரை விசுவாசித்தேன்.’ ஆனால் இப்பொழுது அதைக் குறித்து என்ன? இப்பொழுது கவனியுங்கள், நான் இதை நேசிக்கிறேன். அவர், ‘அது தேனைப் போல ருசியாயுள்ளது’ என்றார். அது தாவீதைக் குறித்து எனக்கு நினைவுபடுத்துகிறது. தாவீது ஒரு மேய்ப்பனாக இருந்தான். பழைய காலங்களில் மேய்ப்பர்கள் வழக்கமாக ஒரு சிறு பிரயாண பையை தங்களுடைய பக்கத்தில் இவ்விதமாகக் கொண்டு செல்வார்கள். அவர்கள் அதில் தேனை வைத்திருப்பர். அவர்களே அதில் கொஞ்சம் புசிப்பார்கள். ஆனால் ஒரு ஆடு வியாதிப்படும் போது, அவர்கள் ஒரு சுண்ணாம்புப்பாறைக்குச் செல்வார்கள். அவர்கள் இந்த தேனில் கொஞ்சம் எடுத்து, அதை அந்தப் பாறை முழுவதும் தேய்த்து விடுவார்கள். அதன்பிறகு அவர்கள் அந்த வியாதிப்பட்ட ஆட்டை அந்த பாறையின் அருகில் கொண்டு வருவார்கள், அந்த வியாதிப்பட்ட ஆடு அந்த தேனை அதிலிருந்து சாப்பிடும்படியாக இத் தேனை நக்கும்போது, அவன் (ஆடு) அந்தச் சுண்ணாம்பை பாறையிலிருந்து நக்கியிருப்பான், அவன் – அது வியாதிப்பட்ட ஆட்டை சுகமாக்கிவிடும். 48. சகோதரனே, அது என்னை நினைவுபடுத்துகிறது, இங்கே இந்தப் பிற்பகல் வேளையில் முழுவதும் தேனினால் நிறைந்த ஒரு பிரயாணப் பை என்னிடம் உள்ளது. நான் அதை கிறிஸ்து இயேசுவாகிய பாறையின் மீது தேய்க்கப் போகிறேன், வியாதிப்பட்ட ஆடுகளாகிய நீங்கள் போய் அதை நக்கிக் கொண்டிருங்கள், (அப்போது) நீங்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்வீர்கள் என்று நான் கூறுகிறேன். ஆமென். நான் இப்பொழுது அதை ஒரு சபையின் மேல் பூசப் போவதில்லை, அதை உங்களுடைய சுகமாக்கும் வல்லமையும் இரட்சிப்பும் இருக்கும் இடமாகிய கிறிஸ்து இயேசுவின் மேல் அதைப் பூசப் போகிறேன். வியாதிப்பட்டுள்ள ஆடுகளாகிய நீங்கள் அதை வேகமாக நக்கும் படியாகப் போங்கள், நீங்கள் விரைவாக சுகமடைகிறீர்களா இல்லையா என்று பாருங்கள். கிறிஸ்து இயேசுவாகிய பாறையின் மேல் அவர்கள் நக்கி, நக்கி, நக்கி, நக்குகின்றனர், இன்னும் அவர்கள் நக்குகின்றனர்... சொஸ்தமடையும்படியாக ஒரு பாறையைக் குறித்து ஏதோவொன்றுள்ளது. 49. பழங்காலங்களில் அவர்கள் வழக்கமாக ஒரு வகையான கல்லைக் (madstone) கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவரை நாய் கடிக்கும் போது, அவர்களை வெறிநாய் கடிக்கும் போதும், அவர்கள் இந்நபரை அழைத்து வந்து அந்தக் கல்லைப் பற்றிப்பிடிக்கச் (stick) செய்வார்கள். அவன் அதைப் பற்றிப்பிடிப்பானானால், அவன் சுகமடைந்தான். அவன் பற்றிப்பிடிக்கவில்லையென்றால், அவன் மரித்தான். ஒரு கன்மலையை எனக்குத் தெரியும், அது ஒவ்வொரு பாவவியாதி கொண்ட நபருக்கும், அல்லது ஒவ்வொரு சரீரபிரகாரமான வியாதி கொண்ட நபருக்கும் காலங்கள் தோறும் உள்ள கன்மலையாகும். அப்படிப்பட்ட நபர் அந்த காலங்கள் தோறும் உள்ள கன்மலையண்டை வந்து, அதைப் பற்றிக் கொண்டு, அதையே சார்ந்திருந்து, அதை உணர்ந்து கொள்ள இயலும். இன்று கிறிஸ்து இயேசுவாகிய பாறையின் வழியாக பாய்ந்து வரும் கல்வாரியின் சுகமாக்கும் வல்லமையிடம் உங்களைக் கொண்டு வர தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார், அது அங்கேயிருக்கும் ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரையும் சுகமாக்கும் (ஆம்), ஒவ்வொரு பாவியையும் பூரணப்படுத்தும், வருத்தப்படுகிறவர்களுக்கு கிறிஸ்து இயேசுவினிடத்தில் சந்தோஷத்தைக் கொண்டு வரும். சகோதரனே, இத்தேசத்தைச் சுற்றிலும் நமக்கு இன்று தேவையானது ஒரு மதரீதியான கூடுகையல்ல; நாம் இப்பொழுது அவைகளில் அநேகமானவற்றை தேசத்தினூடாகப் பெற்றிருக்கிறோம். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சுவிசேஷகர் தேசத்தினூடாகக் கடந்து சென்றார், நன்றாக அறியப்பட்டவர், பெயரளவிலான சபைகள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அவர் பாஸ்டன் அல்லது அங்கே மேலேயுள்ள ஒரு இடத்திற்குச் சென்று, அவர், ‘ஆறு வார காலத்திற்குள் அவர்கள் 20,000 மனந்திரும்பினவர்களைக் கொண்டிருந்தனர்’ என்றார். 50. சாதாரண மனிதர்கள் மற்றும் ஊழியக்காரர்களின் கூட்டமொன்று அந்த மனிதர்களைக் கண்டுபிடிக்கத் திரும்பிச் சென்றது, ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து கடைசி வரை நிலைத்திருக்கிற இருபது பேரை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏன்? அவர்கள் போதுமான அளவு தூரத்திற்குப் போகவில்லை. அவர்கள் அதில் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. அதுதான் காரியம். நமக்கு இன்று தேவையென்னவெனில், ஒரு நல்ல பழைய மாதிரியான பரிசுத்த பவுலினுடைய எழுப்புதல் தான், வேதாகம பரிசுத்த ஆவியானவர் சபைக்கு மீண்டும் திரும்பி வந்து போதிக்கிறார். என்னுடைய சகோதர சகோதரிகளே, அது சரிதான். என்னுடைய சகோதரனும் நானும் இங்கே இருந்த சமயத்தை அது எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நாங்கள் ஒரு நாள் வெளியே ஒரு சிற்றோடைக்குச் சென்றோம்; நாங்கள் சிறு பையன்களாக இருந்தோம். நாங்கள் இந்தப் பழைய உணவு ஆமைகளில் ஒன்றைக் கண்டுபிடித்தோம். அவைகள் இங்கே இந்தியானாவில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்: அது வேடிக்கையாகத் தோற்றமளிக்கும், உங்களுக்குத் தெரியும், அவன் (உணவு ஆமை) தன்னுடைய கால்களை முன்னும் பின்னும் அசைந்தபடி நடக்கிறான். அது வேடிக்கையான காரியமென்று நாங்கள் எண்ணினோம், எனவே நாங்கள் அவனருகில் சென்றோம். அவன், ‘வியூ’ என்றான். அவன் தன்னுடைய ஓட்டிற்குள் திரும்ப இழுத்துக் கொண்டான். 51. தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிராத ஏராளமான ஜனங்களை அது எனக்கு நினைவுபடுத்துகிறது. கூட்டமானது பட்டணத்தில் நடக்கட்டும், ‘வியூ, நீங்கள் அங்கே போக வேண்டாம். அந்தப் பரிசுத்த உருளையர்களின் கூட்டத்தில் எதுவுமில்லை’ என்று கூறுவார்கள். பாருங்கள். அங்கே அது இருக்கிறது. எனவே நான், ‘பொறு, நான் அவனை (ஆமையை) நகர்ந்து போகும்படி செய்வேன்’ என்றேன். நான் ஒரு மரத்திலிருந்து கிளை ஒன்றை வெட்டி, உண்மையாகவே அவன் மேல் அதை வைத்தேன். அது அவனுக்கு ஒரு சிறு நன்மையும் செய்ய வில்லை. நீங்கள் அதைக் கொண்டு அவர்களை அடிக்க இயலாது, அவர்கள் அதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான், ‘அவனைத் தயார் செய்வேன்’ என்றேன். நான் அவனை அந்த சிற்றோடைக்கு எடுத்து வந்து, அவனை அந்த தண்ணீரில் விட்டேன். வெறுமனே ஒரு சில குமிழிகள் மேலே வந்தன, அதைக் குறித்தெல்லாம் அவ்வளவு தான். சகோதரனே, நீங்கள் அவர்களை இந்தவிதமாகவும், அந்த விதமாகவும், தலையை முன்னோக்கி வைத்தும், மூன்று நான்கு தடவைகள் மேலும் கீழுமாக ஞானஸ்நானம் பண்ணலாம். நீங்கள் விரும்பும் எதையும் செய்யலாம். அவர்கள் ஒரு உலர்ந்து போன பாவியாக கீழே சென்று, ஒரு ஈரமான பாவியாக மேலே வருவார்கள், அவர்கள் இன்னும் ஒரு பாவியாகவே இருப்பார்கள். 52. நான் என்ன செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் கொஞ்சம் நெருப்பு மூட்டி, அந்த வயதான பையனை (ஆமையை) அதன் மேல் வைத்தேன். அவன் அப்போது நகர்ந்து சென்றான். நமக்கு இன்று தேவையென்னவெனில், சபையை சேர்ந்து கொள்வதோ ஞானஸ்நானத்தைக் குறித்து வாக்குவாதம் செய்வதோ அல்ல, பரிசுத்த ஆவியும் அக்கினியும் எந்த சபையையும் அசையச் செய்யும். பரிசுத்த ஆவியைத் திரும்பவும் சபையில் கொண்டு வாருங்கள், அப்போஸ்தலர்களையும் போதகர்களையும் மற்றவர்களையும் அவர்களுடைய ஸ்தானத்திற்குள் கொண்டு வாருங்கள், பரிசுத்த ஆவியானவர் அவ்விதமாக ஒரு சபையில் பொழியட்டும், என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். அடை யாளங்களும், அதிசயங்களும், அற்புதங்களும் அதைப் பின்தொடரும்; நிச்சயமாக அதுவே சம்பவிக்கும். நான் பித்துபிடித்தவன் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் இதற்குப் பிறகு என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று அழைக்கப் போகிறீர்கள், எனவே நீங்கள் இப்பொழுதே தொடங்குவது நல்லது. நான் ஒருவேளை அவ்வாறு இருக்கலாம். ஆனால் நான் இங்கே நின்று கொண்டு உணருவதைப் போன்று நீங்களும் உணருவீர்களானால், நீங்களும் அதே காரியத்தைச் செய்து கொண்டிருப்பீர்கள். கவனியுங்கள், தேவன் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணினார். நாம் மீண்டும் அதை விட்டுச் செல்வதற்கு முன்பு, அந்த மன்னாவைக்குறித்து நான் எப்படியாக எண்ணிப் பார்க்கிறேன். அது ஒரு மாதிரியாய் உள்ளது. பழைய காரியங்கள் எல்லாம் புதியவைகளுக்கு ஒரு மாதிரியாய் உள்ளன. பரிசுத்த ஆவியானவர் அந்த மன்னாவைப் பொழியும் இடத்தை நான் காண்கிறேன். அவைகள் கெடாதிருந்தது, அந்த மன்னா முழு பிரயாணத்திலும் ஒருபோதும் நின்று போகவில்லை. 53. மேலும் இப்பொழுது, கவனியுங்கள், மன்னா தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது. இப்பொழுது, வெளியில் சென்று அதில் பல ஓமர்கள் அளவு மன்னாவை எடுத்து, அதை திரும்பக் கொண்டு போய் உடன்படிக்கை பெட்டி இருக்கிற மகா பரிசுத்த ஸ்லத்தில் வை என்று மோசே ஆரோனிடம் கூறினான். இதற்குப் பிறகு, ஒவ்வொரு ஆசாரியனும் (அதைப் பெற்றுக் கொண்டீர்களா?) ஆசாரியத்துவத்திற்குள் வருகிற ஒவ்வொரு ஆசாரியனும் தொடக்கத்தில் விழுந்த அந்த அசலான மன்னாவில் ஒரு வாய்நிறைய கொண்டிருக்கலாம். இப்பொழுது, அது ஒருபோதும் திரும்ப கெட்டுப்போகவில்லை; அது மகா பரிசுத்த ஸ்லத்தில் இருந்தது. ஆசாரியத்துவத்துக்குள் வருகிற ஒவ்வொரு ஆசாரியனும், அவன் ஒரு ஆசாரியனாக நியமிக்கப்பட்ட போது, அவர்கள் கைநிறைய மன்னாவை எடுத்து, அவனுடைய வாய் நிறைய கொடுப்பார்கள். ஆதியில் விழுந்த அந்த அசலான மன்னாவை அவன் ருசி பார்த்தான். பரிசுத்த ஆவிக்கு என்னவொரு மாதிரி! பெந்தெகோஸ்தே நாளில், தேவன் ஜனங்கள் மேல் ஆசீர்வாதங்களைப் பொழிந்த போது... நூற்றியிருபது பேர்களாகிய அவர்களெல்லாரும் ஒரு சிறு அறையைப் பூட்டிக் கொண்டு, அந்த ஸ்திரீகளும் மனிதர்களும் ஒன்றாக ஜெபித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். அவர்கள் வெளியே தெருவில் சென்று, சாட்சி பகர்ந்து தேவனைத் துதிக்கிறார்கள். 54. இப்பொழுது கவனியுங்கள், அதுதான் இயேசு வரும் வரை, காலங்களினூடாக பரிசுத்த ஆவி சபைக்குக் கொண்டு வரப்படும் நம்முடைய மன்னாவாக இருந்தது. அல்லேலூயா. கவனியுங்கள், எவ்வளவு காலம் அது கெடாமல் இருந்தது? போதகராகிய நீங்கள் உங்களுடைய வேதாகமத்தை அறியாமலிருக்கிறீர்களா? பேதுரு சொன்னான்... அவர்கள் தள்ளாடிக் கொண்டு, கூச்சலிடத் தொடங்கின போது, வெளிப்புறமுள்ள மதகுருமார்களின் முழு சுவிசேஷ சிறப்பு வாய்ந்தவர்கள் அல்லது வெறி பிடித்த உலகமானது அவனிடம் வந்து, ‘இந்த மனிதர்கள் மதுபானம் குடித்துள்ளார்கள்’ என்றனர். உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மேலும், கத்தோலிக்க நண்பர்களும் மற்றவர்களும் கவனியுங்கள். ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிமரியாள், அவர்கள் மத்தியில் இருந்தாள். தேவ குமாரனுடைய தாயார் கூட ஒரு குடிகார ஸ்திரீயைப் போல நடந்து கொள்ளும் அளவுக்கு பரிசுத்த ஆவியால் நிறையாதவளாய் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் வரும்படி தேவன் அனுமதிக்காதிருப்பாரானால், அதை விட குறைவான ஒன்றைப் பெற்றுக் கொண்டு நீங்கள் எவ்வாறு போக முடியும்? அது எவ்வாறு இருக்கப்போகிறது? நீங்களே அதை சிந்தித்துக் கொள்ளுங்கள். மரியாள் அங்கிருந்ததாக வேதாகமம் கூறுகிறது. கிறிஸ்துவினுடைய தாயாரே பெந்தெகோஸ்தேயினூடாகச் சென்று, அவள் குடித்தவளைப் போன்று தள்ளாடும் அளவுக்கு, அவள் பரிசுத்த ஆவியால் முழுவதுமாக நிறையப்படுகிறவரையில் அங்கே எருசலேம் பட்டணத்தில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. ஆமென். அது சத்தியம். அது வேதாகமமாக உள்ளது. 55. அவர்கள் வெளியே இருந்த போது, அந்த சிறிய கோழையான பேதுரு தான் பரிசுத்த ஆவியால் நிறைக்கப்பட்ட பிறகு, ஒரு மேடையில் அல்லது அடிமரக்கட்டையில் அல்லது ஏதோவொன்றின் மேல் நின்றான். அவர்கள் எல்லாரும் நகைத்து, ‘அந்த பரிசுத்த உருளையர்களின் கூட்டத்தைப் பாருங்கள். அங்கே மேலேயுள்ள அவர்களைப் பாருங்கள். அவர்கள் குடித்தவர்களைப் போல நடந்து கொள்கின்றனர்’ என்றனர். அவர்கள் தள்ளாடிக் கொண்டிருந்தனர், நீங்கள் அந்தக் கூட்டங்களில் ஒன்றில் எப்பொழுதாவது இருந்திருப்பீர்களானால், அது அற்புதமானது. அது சரியே. மோசேயைக் கவனியுங்கள், அவன் அதற்கு ஒரு மாதிரியாயிருந்தான். அவர்கள் செங்கடலைக் கடந்தபோது, மறுகரையில் மோசே திரும்பிப் பார்த்த போது, ஆளோட்டிகள் மூழ்கடிக்கப்பட்டிருந்ததைக் கண்டான்... கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக வருகிற நமக்கு அது அப்படியே மாதிரியாய் உள்ளது, நாம் பரிசுத்தமாக்கப்படுதலின் வல்லமை மட்டுமாக சுத்திகரிக்கப்பட்டு, பாவத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, எல்லா புகைபிடித்தலையும், மது அருந்துதலையும், சீட்டு விருந்துகளையும், படக்காட்சிகளையும், திரும்பிப் பார்க்கும்போது, உலகத்தின் எல்லா கீழ்த்தரமான ஜீவியமும் கிறிஸ்துவின் இரத்தத்தில் மரித்து விட்டதைப் பார்ப்பீர்கள். மோசே தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, ஆவியில் பாடத் தொடங்கினான். தீர்க்கதரிசியாகிய மிரியாமும் ஒரு தம்புருவை எடுத்து, கடற்கரைக்குச் சென்று, துள்ளிக்குதித்து, தம்புருவை அடித்து, நடனமாடினாள். இஸ்ரவேல் குமாரத்திகளும் அவளைப் பின்தொடர்ந்து, அடித்து, பாடல்பாடி, ஆடிக்கொண்டிருந்தனர். அது ஒரு பழைமை நாகரீகமான பரிசுத்த ஆவி கூடாரக் கூட் டமாக இல்லையென்றால், நான் அப்படிப்பட்ட ஒன்றை ஒருபோதும் கண்டதேயில்லை: (ஆமென்.) ஆவியில் பாடுதல், ஆவியில் நடனமாடுதல். ஆமென். 56. சகோதரனே, கவனி, அவர்கள் அனைவரும் பெரிய நேரத்தைக் கொண்டிருந்தனர், கடைசி பக்கமானது என்னவென்றால், பரிகாசம் செய்தலும், நகைத்தலும் அவர்களைக் குறித்து வேடிக்கை செய்தலுமாக இருந்தது. பேதுரு அவனுடைய மேடை அல்லது மரக்கட்டையின் மேல் நின்றபடி, ‘யூதர்களே, நீங்கள் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள்: நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் குடித்து வெறி கொண்டவர்களல்ல; இது நாளின் மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே’ என்றான், மதுவிற்கும் இடம் கூட திறந்திருக் காது. ‘ஆனால் இதுதான் அது’ என்றான். சகோதரனே, இது அதுவாக இல்லையென்றால், அது வரும் வரையில் இதைப் பற்றிக் கொண்டிருக்கப்போகிறேன். ஆமென். ‘யோவேல் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது இது தான்; அது கடைசி நாட்களில் நிறைவேறும், நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்: உங்கள் குமாரரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் ஊழியக்காரர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்: உயர வானத்திலும், தாழப் பூமியிலும் அக்கினிஸ்தம்பங்கள், புகைக்காடாகிய (vapors of smoke) அடையாளங்களைக் காட்டுவேன்: கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருமுன்னே அது சம்பவிக்கும், கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைக்கிறார்’ என்றான். அவர்கள் தங்களுடைய இருதயத்தில் குத்தப்பட்டவர்களாகி, ‘சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்றார்கள். பேதுரு, ‘நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன் னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்’ என்றான். என்ன? மன்னா. நாம் அதில் பாத்திரம் நிறைய பெற்றுள்ளோம், நாம் அங்கே பொருத்தப் போகிறோம், அது உங்களுடைய பிள்ளைகளுக்கும், உங்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் துரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது, இன்றும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிற யாவருக்கும் அது உண்டாயிருக்கிறது, அவர்கள் அதே மன்னாவைப் பெற்றனர். என்ன? பரிசுத்த ஆவியைப் போன்று தோன்றுகிற ஏதோ வொன்றை அவர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள், ஆனால் அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த அசலான மன்னாவை வாய் முழுவதும், இருதயம் நிரம்பவும் பெற்றிருந்தனர். தேவன் ஒவ்வொரு சந்ததிக்கும் அதை வைத்திருக்கிறார். அல்லேலூயா. ஆமென். அது அதே முடிவுகளைக் கொண்டு வரும்: ஆவியால் நிறைந்து, அடையாளங்களுடனும் அற்புதங்களுடனும், குடித்தவர்களைப் போன்று தள்ளாடுதல். ஆமென். வியூ, நான் பக்திபரவசப்படுகிறேன். 57. கவனியுங்கள், தேவன் எவ்விதமாக ஆசீர்வதித்து, அது கீழிறங்கி வரும் என்று வாக்குத்தத்தம் பண்ணினார். அது யாருக்காக? ‘அது உங்களுக்காகவும், உங்களுடைய பிள்ளைகளுக்காகவும், உங்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்காகவும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.’ இந்தியானாவிலுள்ள கானர்ஸ்வில், அது எங்கிருந்தாலும், தேவன் இன்னும் அழைத்துக் கொண்டிருப்பாரானால், அவர் இன்னும் ஒவ்வொரு ஆசாரியனுக்கும் அருளிக்கொண்டிருக்கிறார்... நாம் ஆசாரியனா? ஒரு இராஜரீக ஆசாரியத்துவம், பரிசுத்த தேசம், தேவனிடத்தில் வந்து, ஆவிக்குரிய பலிகளைச் செலுத்துதல் (என்ன?), நம்முடைய உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திரத்தை அவருடைய நாமத்துக்கு செலுத்துகிறோம். நான் இந்த பிற்பகல் வேளையில் அந்த பாக்கியத்திற்காக முழுமையாகவும் மிகுதியாகவும் உற்சாகம் அடைந்து கொண்டிருக்கிறேன். என்ன காரியமென்று உங்களுக்குத் தெரியுமா? நான் அப்படியே கானானுக்குச் (Canaan) சென்று, இந்த புதிய திராட்சைகளில் சிலவற்றை புசித்துக் கொண்டிருக்கிறேன்; என்னால் இயன்ற மட்டுமாக பானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆமென். அது உற்சாகமுள்ளவர்களாக நீங்கள் இருக்க காரணமாகிறது. சரி. ஓ, அது உண்மை. ஓ, பிறப்பதற்கு முன்பே தன்னுடைய தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு துள்ளிக் குதித்த அவன் எப்படிப்பட்ட குழந்தையாய் இருக்க வேண்டும் என்பதை நான் எவ்வளவாய் காண்கிறேன். அவன் மாய்மாலக்காரனாய் இருக்கப்போவதில்லை; அவன் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தானோ அதை உடையவனாக இருக்கப்போகிறான். எனவே அவன் வெளியே வந்து பரிசுத்த ஆவியைக் குறித்துப் பிரசங்கித்தான். 58. அவன் அங்கே நின்று பிரசங்கித்தான்... நாம் துரிதப் பட வேண்டியுள்ளது, என்னுடைய நேரம் தாண்டி விட்டது என்பதை உணருகிறேன், எனவே துரிதப்படுகிறேன். இப்பொழுது, நான் இனிமையாகவும் நன்றாகவும் உணருகிறேன். ஆனால் பாருங்கள், நான் சிறிது நேரம் அங்கே கவனித்தேன். அதன்பிறகு இயேசு வந்தார். அவருடைய பிறப்பைக் குறித்து நாமெல்லாரும் அறிந்தபடி, அவர் பிறந்த போது – அவருடைய ஊழியம். நாம் இப்பொழுது நாம் துரிதமாகப் பாடத்திற்கு வருவோம். அவர் வந்து சேருவதைக் கவனியுங்கள். இப்பொழுது நீங்கள் (அறிகிற) முதலாவது காரியம் என்னவெனில், அவர் லாசருடைய வீட்டை விட்டு விலகி தூரமாய் போகும் அளவுக்கு அவர் மிகவும் கீர்த்தியடையத் தொடங்கினார். மேலும் இயேசு லாசருடைய வீட்டை விட்டுப் போன போது, துக்கமும் வியாதியும் உள்ளே வருகின்றன. இயேசு உங்களுடைய வீட்டை விட்டுப் போகும் போது, துயரமும் வியாதியும் உள்ளே வருகின்றன. இப்பொழுது, இந்தக் காரியத்தில் அது அவ்வாறில்லை, ஏனெனில் அவர் தூரமாய் போகும்படி நிர்பந்தம் உண்டானது, அல்லது வெளியே செல்ல வேண்டியிருந்தது; அவருக்கு ஒரு தரிசனம் உண்டாகி, தேவன் அவரைத் தூரமான இடத்திற்கு அனுப்பியிருந்தார். எனவே பிறகு லாசரு வியாதிப்பட்டான். அப்பொழுது எருசலேமிலிருந்த குற்றம் கண்டுபிடிக்கிறவர்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ‘உ-ஊ, அவனுடைய (லாசருவினுடைய) சிநேகிதன் எங்கே? அந்த தெய்வீக சுகமளிப்பவன் எங்கே?’ என்றனர். ‘நல்லது, அவர் வருவதற்காக நாங்கள் ஆளனுப்பியிருக்கிறோம், அவர் அதைப் புறக்கணித்து விட்டார்.’ 59. ஓ, என்னே, மேய்ப்பர் வருவதற்காக ஆளனுப்புங்கள், அவர் அவனைப் பொருட்படுத்தாமல், வருவதைப் புறக்கணிக்கலாம். நீங்கள் என்ன செய்வீர்கள்? ‘ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் இனிமேலும் அந்த மேய்ப்பரோடு என்னை முட்டாளாக்கிக் கொள்ளமாட்டேன், நான் இங்கு சென்று, அந்த கூட்டத்தினரோடு சேர்ந்து கொள்ளுவேன், அல்லது நான் இதையோ அல்லது அதையோ சேர்ந்து கொள்ளுவேன்.’ அந்த காரணத்தினால் தான் உங்களால் எதையும் அடைய முடியவில்லை. அது சரியே. இப்பொழுது, இதைக் கூறுவதற்கு அவர்கள் என்னிடம் ஒருபோதும் கூறவில்லை, ஆனால் சகோதரனே, உங்களுடைய மேய்ப்பரிடம் உங்களால் விசுவாசம் கொள்ள முடியவில்லையென்றால், அவரை விட்டு விலகிவிடுங்கள். அது சரியே. உங்களுடைய மேய்ப்பரிடம் உங்களுக்கு விசுவாசம் இருக்குமானால், அவரால் இன்று உங்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால் நீங்கள் அவரை விசுவாசித்தாக வேண்டும். அவர் ஒரு தேவ மனிதன் என்று விசுவாசியுங்கள். சில சமயங்களில் நீங்கள் விரல்களை மடக்கி சுடக்கொலி (snap) எழுப்பும் ஒவ்வொரு தடவையும் அவரால் வர இயலாது, ஒரு வேளை வர இயலாமல் இருக்கலாம், அவர் ஒருவேளை தேவன் செய்யும்படி கூறுவதைப் பின்பற்றிக் கொண்டிருக்கலாம். அது சரியே. 60. இப்பொழுது, ஆனால் அவர்கள் கூறினார்கள்... அவர்கள் மீண்டும் சொல்லியனுப்பினார்கள். அவர்கள் மீண்டும் சொல்லியனுப்பிய போது, ஏன், அவர் சற்று தூரமாகப் போய் விட்டார். என்னே, என்னவொரு நிலைமை. லாசரு மிகவும் வியாதிப்பட்டு, மரித்து விட்டான். அவர்கள் அவனை எடுத்துச் சென்று, அவனுடைய சரீரத்திற்கு தைலமிட்டனர் (embalmed). அவனை எடுத்துக் கொண்டு போய் கல்லறையில் வைத்தனர். அவன் – அவன் மரித்து விட்டதை இயேசு அப்போதே அறிந்து கொண்டார். எனவே அவருடைய சீஷர்களிடம் கூறினார்... உங்களுக்கு அந்தக் கதை தெரியும். அவர் இங்கே எருசலேமிற்குத் திரும்பி வருகிறார். இப்பொழுது, அவர்களில் சிலர், ‘ஆம், அந்தப் பரிசுத்த உருளையன் இங்கே பாதையில் இருக்கிறான் என்பதை நாம் கேள்விப்படுகிறோம், அந்த தெய்வீக சுகமளிப்பவன் மீண்டும் வருகிறான். பையனே, அவன் (லாசரு) மரித்து விட்டான், ஓ, அவர் இங்கே இருந்திருப்பாரானால், அவர் நிச்சயமாக அவனை (லாசருவை) சுகப்படுத்தியிருப்பார்’ என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ஆனால் குறைந்த வயதுடைய மார்த்தாள் – நான் அவளைப் போன்றவர்களை நேசிக்கிறேன். அவள் காரியங்களை மிகவும் மெதுவாக செய்பவளாக இருந்தாள், ஆனால் மரியாள் எல்லா நேரமும் காரியங்களை அதிகமாகச் செய்து கொண்டிருக்கும் வேளையில், மார்த்தாளோ இயேசுவின் பாதத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் என்பதைக் கவனியுங்கள். அது இப்பொழுது பயனளிக்கிறது. எனவே அவளுக்கு இங்கே நற்பலன் உண்டானது; இயேசு வந்திருக்கிறார் என்று அவள் கேள்விப்பட்டாள். எனவே அவள் இங்கே தெருவினூடாக வருகிறாள். குற்றம் கண்டுபிடிப்பவர்கள், ‘நீ இப்பொழுது எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்? இந்த சமயத்தில் என்ன செய்கிறாய்? அவரைக் (இயேசுவைக்) காண வெளியே செல்கிறாய் என்று யூகிக்கிறேன்’ என்று கூறுவதை என்னால் கற்பனை செய்யவும் பார்க் கவும் முடிகிறது. 61. அவள் அப்படியே அதனூடாக நெருக்கித் தள்ளிக் கொண்டே சென்றாள், ஒருபோதும் (அவர்களுக்கு) கவனம் செலுத்தவேயில்லை. அவள் இயேசு இருந்த இடத்தை அடைந்தாள். இப்பொழுது, வழக்கமாக, ‘நீர் ஏன் என்னுடைய சகோத ரனிடம் வரவில்லை?’ என்று கூறி அவரைக் கடிந்து கொள்ள அவளுக்கு உரிமையிருந்தது போல தோன்றுகிறது. கூர்ந்து கவனியுங்கள். ‘நாங்கள் அழைத்த போது நீர் ஏன் வரவில்லை? இப்பொழுது, நாங்கள் சபையை விட்டு விட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டோம்; நாங்கள் எங்களுடைய ஆசாரியனை விட்டு விட்டோம்; நாங்கள் அவருடைய விருப்பத்திற்கு மாறாக சென்றோம். நாங்கள் உம்மை எங்களுடைய வீட்டில் வைத்திருந்தோம்; எங்களுடைய பணத்தை உமக்காக செலவழித்தோம். எங்களுடைய ஆகாரத்தை உமக்கு புசிக்கக் கொடுத்தோம். நாங்கள் உமக்கு வஸ்திரங்களைக் கொடுத்தோம். என்னுடைய சகோதரன் வியாதிப்பட்டிருந்த போது, நாங்கள் உமக்கு சொல்லியனுப்பினோம், ஆனால் நீரோ எங்களுக்கு உம்முடைய முதுகைத் திருப்பிக் கொண்டு, தூரமாய் போய் விட்டீர்.’ அதனுடைய ஒவ்வொரு சிறு காரியமும் உண்மையாக இருந்தது. ஆனால், சகோதரனே, நான் இப்பொழுது உன்னிடம் ஒன்றைக் கூறட்டும். அது எந்த தெய்வீகவரத்தின் பேரிலுமுள்ள உன்னுடைய மனப்பான்மையாக உள்ளது, அந்த மனப்பான்மையின் பேரிலுள்ள உன்னுடைய அணுகுமுறையானது அதிலிருந்து நீ எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறாய் என்பதை தீர்மானிக்கிறது. நீ தேவனிடம் தவறான வழியில் வருகிறாய். இயேசு அப்பட்டணத்திற்குள் நடந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை. அவள் அவரிடம் ஓடி, அவருடைய பாதத்தில் விழுந்து, ‘ஆண்டவரே (அவர் அவ்வாறு தான் இருந்தார்), ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரிக்க மாட்டான்’ என்றாள். 62. ஓ, நான் அதை விரும்புகிறேன். அது தேவனுடைய குமாரன் என்று அவள் அறிந்திருந்தாள். இப்பொழுது, அவள் அங்கு தான் அதைப் பெற்றுக்கொண்டாள் என்று எண்ணுகிறேன், அவள் வேதாகமத்தில் பின்னால் வாசித்திருக்க வேண்டும், அங்கே ஒரு சமயம் சூனேமித்திய ஸ்திரீ ஒருத்தியிருந்தாள். அவளுக்கு குழந்தையில்லாதிருந்தது, மேலும் – மேலும் எலிசா அவளை ஆசீர்வதித்தான், அவள் ஒரு குழந்தையைப் (பெற்றெடுத்தாள்) கொண்டிருந்தாள். குழந்தைக்கு ஏறக்குறைய 10 அல்லது 12 வயதானது, ஒரு நாள், அந்தச் சிறு பையனுக்கு சூரிய வெப்பத்தாக்குதல் வியாதி உண்டாயிருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய அந்த நாளின் பதினொன்றாம் மணி வேளையில், அவர்கள், ‘என் தலை நோகிறது, என் தலை நோகிறது’ என்று கதறி கூச்சலிடும் சத்தத்தைக் கேட்ட னர். தகப்பன் அவனைத் திருப்பி அனுப்பினான். அவன் உள்ளே சென்றான், மதிய வேளையில் அந்த பிள்ளையாண்டான் மரித்துப் போனான். அந்தத் தீர்க்கதரிசி தங்குவதற்கு அவர்கள் அங்கே ஒரு சிறிய இடத்தைக் கட்டியிருந்தனர். அந்தத் தாயைக் கவனியுங்கள், எவ்வளவாகச் பொருத்தமானவளாக இருந்தாள். அவள் அந்த மரித்துப் போன சிறு பையனை எடுத்து, அவனைத் தீர்க்கதரிசியின் அறையில் வைத்தாள், தீர்க்கதரிசியின் படுக்கையின் மேல் அவனைக் கிடத்தினாள்: அவனைக் கிடத்துவதற்கு நல்ல இடம். அவள், ‘இப்பொழுது என்னுடைய கோவேறு கழுதைக்கு சேணம் பூட்டு, முன்னோக்கிச் செல், நான் உத்தரவிடும் வரை நிற்காதே’ என்றாள். இப்பொழுது, நான் அதை விரும்புகிறேன். சரி, அவளுடைய புருஷன், ‘இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்ல, எனவே அங்கே தீர்க்கதரிசி இருக்கமாட்டார்’ என்றான். அவளோ, ‘எல்லாம் சரிதான்’ என்றாள். 63. இப்பொழுது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவதில்லை; உங்களுக்கு அது தெரியும். எனவே எலியா தன்னுடைய குகையருகில் நின்று கொண்டிருந்தான், அவன் உற்றுப்பார்த்து கேயாசியிடம் சொன்னான், அவன், ‘இங்கே அந்த சூனேமித்தியாள் வருகிறாள். அவள் அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏதோ பிரச்சனை நேர்ந்துள்ளது. தேவன் அதை என்னிடமிருந்து மறைத்து விட்டிருக்கிறார். எனக்குத் தெரியாது’ என்றான். பாருங்கள், அவர் அவனிடம் சொல்ல வேண்டியதில்லை. எனவே சூனேமித்தியாள் மேலே ஓடிச் சென்றாள், கேயாசியும் அவளிடம் ஓடினான். எலிசா, ‘நீ சுகமாயிருக்கிறாயா? உன்னுடைய புருஷன் சுகமாயிருக்கிறானா? குழந்தை சுகமாயிருக்கிறதா?’ என்று கேட்டான். இப்பொழுது, இதை நான் விரும்புகிறேன். அவள், ‘எல்லாரும் சுகம் தான்’ என்றாள். 64. அங்கே அது இருந்தது. அது தேவனுடைய தீர்க்கதரிசி என்று அவள் அறிந்திருந்தாள். அவள் அந்த மனுஷனிடத்திற்கு எப்பொழுதாவது போவாளானால், அவளுடைய குழந்தை ஏன் மரித்தது என்பதை அறிந்து கொள்ளலாம் என்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே எல்லாமும் சரியாக இருந்தது. தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என் பதை அறிந்திருந்தாள். அது சரியே. எனவே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து, அவளுடைய இரகசியத்தை அவனிடம் வெளிப்படுத்தினாள். அவன் கேயாசியிடம், ‘நீ உன்னுடைய இடையைக் கட்டிக் கொண்டு, என்னுடைய தடியைப் பிடித்துக் கொள்: யாராவது உன்னிடம் பேசினால், நீ பேச வேண்டாம்: ஆனால் நீ போய் இந்தத் தடியை மரித்துப் போன பிள்ளையின் மேல் வை’ என்றான். இப்பொழுது, பவுல் உறுமால்களை தன்னுடைய சரீரத்தை விட்டு எடுத்து (வியாதிக்காரர் மேல் போடும்) காரியத்தை அவன் இங்கிருந்து தான் பெற்றுக் கொண்டான் என்று நான் நினைக்கிறேன். எலியா தான் தொடுகிற எல்லாமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை அறிந்திருந்தான். இப்பொழுது, அந்த ஸ்திரீ அதை விசுவாசிக்கும்படி செய்ய அவனால் கூடுமானால்... ஆனால் அவளுடைய விசுவாசம் அந்த தடியில் இருக்கவில்லை; அவளுடைய விசுவாசமானது தீர்க்கதரிசியில் இருந்தது. அவள், ‘நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். நான் உம்முடன் தங்கியிருப்பேன்’ என்றாள். 65. எனவே எலியா தன்னுடைய சொந்த இடையையும் கட்டிக் கொண்டாக வேண்டும் என்று நினைத்தான். எனவே அவன் போகிறான். கேயாசியும் அவனுக்கு முன்னால் போனான்; அவன் திரும்பி வந்து, ‘பிள்ளைக்கு ஜீவனில்லை; அவன் மரித்து விட்டான்’ என்றான். எனவே எலியா மரித்த – மரித்து போன பிள்ளையைக் கிடத்தியிருந்த இடத்திற்கு வந்தான். துக்கம் கொண்டாடுதலும் அழுகையும் தொடர்ந்து கொண்டிருந்தது. அவனைக் கவனியுங்கள். பிள்ளை இருந்த அறைக்குள் அவன் போகிறான். அவன் தரையில் மேலும் கீழும் நடக்கிறான். நான் அதை விரும்பு கிறேன்...?... ‘கர்த்தாவே, நீர் என்ன செய்யப் போகிறீர்?’ தரையில் மேலும் கீழும் (நடந்தான்). ஒவ்வொருவரும் வெளியே அழுது கொண்டும், மிகுந்த உணர்ச்சியினால் வியாதிப்பட்டும், அலறிக் கூச்சலிட்டுக் கொண்டும், போய்க் கொண்டிருந்தனர். அவனோ அப்படியே தரையில் மேலும் கீழும் நடந்து கொண் டிருந்தான். அவன் சென்று அவனுடைய (பிள்ளையினுடைய) சரீரத்தின் மேல் படுத்துக் கொண்டான், ஒரு மனிதன், ‘நாம் அவனைப் போல பாடுள்ள மனுஷனாய் இருக்கிறோம்’ என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு மனிதன், ஒரு தூதனல்ல, ஒரு மனிதன், ஒரு தீர்க்கதரிசி, அவன் தன் சரீரத்தை அந்த மரித்துப்போன பிள்ளையின் மேல் கிடத்தினான். அவன் தன்னுடைய உதடுகளை அதனுடைய உதடுகளின் மேலும், தன்னுடைய மூக்கை அதனுடைய மூக்கின் மேலும், தன்னுடைய நெற்றியை அதனுடைய நெற்றியின் மேலும், தன்னுடைய கரங்களை அதனுடைய கரங் களின் மேலும் வைத்தவாறு சிறிது நேரம் அங்கே படுத்திருந்தான், அவன் அங்கே படுத்தான். எலியா வயதான எலும்பும் தோலுமான மனிதனாக (skinny man) இருந்திருப்பான் என்று எண்ணுகிறேன், எனவே அவன் சரியாக அந்தப் பிள்ளையின் மேல் படுத்துக் கொண்டான். 66. அவன் எழுந்தான், பிள்ளையின் (உடல்) அனல் கொண்டதை உணர்ந்து கொண்டான். மீண்டும் முன்னும் பின்னும் நடக்கிறான்... அல்லேலூயா. தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்குள் இருந்தார். எனவே அவன் மீண்டும் முன்னும் பின்னும் நடந்தான். அவன் சென்று மீண்டும் தன்னுடைய சரீரத்தை அந்த மரித்துப் போன பிள்ளையின் மேல் கிடத்தினான். அவன் (அந்தப் பிள்ளை) ஏழுதரம் தும்மினான். ‘இந்தப் பிள்ளையை எடுத்துக் கொண்டு போய், சூனேமியாளிடம் கொடு’ என்றான். பிள்ளை உயிரடைந்தான். இப்பொழுது, அவர்களை ஏழுதரம் தும்மும்படி செய்ய நமக்கு நேரம் இருக்க வேண்டுமென்று விரும்பினேன், ஆனால் நாம் துரிதப்பட வேண்டியுள்ளது. நண்பர்களே, கவனியுங்கள், மரியாள், இல்லை – மார்த்தாளிடம் சந்தேகமேயில்லை, அவள் அந்தக் கதையைப் படித்திருந்தாள், ஆனால் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்குள் இருந்தார் என்பதை அந்த சூனேமிய ஸ்திரீ அறிந்திருப்பாளானால், நிச்சயமாக தேவன் தம்முடைய குமாரனில் இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் அடையாளம் கண்டுகொண்டாள், ஒரு தீர்க்கதரிசினுடைய தேவ வரத்தை சூனேமிய ஸ்திரீ அடையாளம் கண்டுகொண்டாள். அவள் சரியான விதமாக அவனை அணுகினாள். தேவனுடைய வரமானது அவருடைய குமாரனில் இருந்ததை மரியாள் அடையாளம் கண்டு கொண்டாள். எனவே அவள் அவரிடம் ஓடினாள்; அவள் முகங் குப்புற விழுந்தாள். இப்பொழுது, ஒரு நிமிடம் கூர்ந்து கவனியுங்கள். அவள் அவருடைய பாதத்தில் விழுந்து, ‘ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால், என சகோதரன் மரித்திருக்க மாட்டான். ஆனால் இப்பொதும் கூட நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்’ என்றாள். 67. அந்த வாலிபன் மரித்தவனாக அங்கே நான்கு நாட்களாக படுத்திருக்கிறான், தோல் புழுக்கள் அவனுடைய சரீரத்தினூடாக ஊர்ந்து கொண்டிருந்தன, அசுத்தம், அவ்வளவு அதிகமான நேரத்தில் மூக்கு உள்ளே (அழுகி) விழுந்திருந்தது. ‘ஆனால் இப்பொழுதும், ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட் டுக் கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்.’ தேசத்தைச் சுற்றிலுமுள்ள எல்லா மருத்துவர்களையும் உடைய ஜனங்கள் இங்கேயிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். மருத்துவர்கள் அநேகமாக உங்களைக் கைவிட்டு, ‘உமக்கு தீராதவியாதி உள்ளது’ என்று கூறினார்கள். ‘ஆனால் இப்பொழுதும், ஆண்டவரே, நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெ துவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்.’ உங்களால் அதை எண்ணிப்பார்க்க முடிந்ததா? அது இருதயங்களை மாற்றுகிறது. அவர் அவளைப் பார்த்து, ‘உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்’ என்று கூறினார். அவள், ‘ஆம், ஆண்டவரே, கடைசி நாளில் அவன் மீண்டும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்; அவன் ஒரு நல்ல வாலிபனாக இருந்தான். பொதுவான உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளில் அவனும் உயிர்த்தெழுந்திருப்பான்’ என்றாள். அவரைக் கவனியுங்கள். அவரைப் பார்க்கும்போது அவர் மிகவும் நன்றாக தோற்றமளிக்கவில்லை. ‘நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது’ என்று வேதாகமம் கூறுகிறது. பெரும்பாலும் மெலிந்து போன சிறு நபராக அவர் இருந்தார். அவர் தம்முடைய சிறு சரீரத்தை நிமிர்த்தி, அவர், ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்: உயிரோடிருந்து விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா?’ என்றார். 68. அவள் சொன்னாள்... அதைக் கவனியுங்கள், ஒவ்வொரு சக்கரமும் சரியாக அதில் தானே வந்து கொண்டிருக்கிறது. தேவனிடத்தில் ஏதோவொன்றை வாஞ்சித்துக் கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீ அவருக்கு முன்பாக நின்று கொண்டு, முழுவதும் அபிஷேகம் பண்ணப்பட்டு, அவரிடம், ‘ஆம், நீர் மேசியாவென்று நான் விசுவாசிக்கிறேன். நீர் தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்; நீர் அறுவடையின் ஆண்டவர். நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ, அதை தேவன் செய்வார் என்று விசுவாசிக்கிறேன். மேசியாவில் அதை செய்வதாக தேவன் வாக்குப் பண்ணியிருக்கிறார், எனவே நான் உம்மிடத்தில் கேட்கிறேன், நான் சரியாக இப்பொழுதே உமக்கு முன்பாக இங்கேயிருக்கிறேன். இப்பொழுதும், ஆண்டவரே, நீர் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் தந்தருளுவார்’ என்று கூறினாள். இதைக் கவனியுங்கள். அவர், ‘உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்’ என்றார். அவள், ‘அவன் கடைசி நாளில் உயிர்த்தெழுந்திருப்பான்’ என்றாள். அவரோ, ‘நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்: உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை விசுவாசிக்கிறாயா?’ என்றார். அவள், ‘ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்’ என்றாள். 69. இந்தப் பிற்பகல் வேளையைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதன் பேரில் அதே மனப்பான்மையைக் கொண்டிருந்து, என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். உங்களுடைய தேவை என்னவாக இருந்தாலும், அது பரிசுத்த ஆவியானவர் என்று நீங்கள் அடையாளம் கண்டுகொண்டால், தேவன் அதை உங்களுக்குத் தந்தருளுவார். அதைக் குறித்த பிரச்சனை என்னவெனில், அதைக் குறித்து என்ன நினைக்க வேண்டு மென்று உங்களுக்குத் – உங்களுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு அடிமைத்தளை விலங்கையும் உடைத்தெறிந்து விட்டு, ‘அது உண்மை’ என்று கூறுங்கள். ஆம், ஐயா. அவள், ‘நீர் தேவனிடம் கேட்டுக் கொள்ளுவதெதுவோ, தேவன் அதை செய்வார்’ என்று கூறினாள். மேலும் அவர், ‘உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்’ என்றார். அவள், ‘ஆம், ஆண்டவரே, உயிர்த்தெழுதலில் அவன் உயிர்த்தெழுந்திருப்பான்’ என்றாள். இப்பொழுது, கவனியுங்கள், ‘அவனை எங்கே வைத்தீர்கள்’ என்றார். அவர் இங்கே போகிறார். சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நபர் என்னிடம், ‘சகோதரன் பிரன்ஹாமே, அந்த மனிதர் தெய்வீகமானவர் என்று நீங்கள் விசுவாசிப்பதாக என்னிடம் கூற விரும்புகிறீர்களா?’ என்று கூறினாள். நான், ‘ஆம், ஐயா’ என்றேன். ‘அவர் ஒரு மனிதன் மாத்திரமே என்று என்னால் நிரூபிக்க முடியும்’ என்றாள். நான், ‘அவர் மனிதனை விட மேலானவர்’ என்றேன். ‘ஓ,’ அவள், ‘அவர் – அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்’ என்றாள். இங்கேயுள்ள கொஞ்சம் மேலோட்டமான இந்தப் போதகத்தைத்தான் இன்றைய ஜனங்கள் பெற்றுள்ளனர். ‘சகோதரனே, அவர் – அவர் தேவனாகவோ அல்லது ஒரு வஞ்சகராகவோ இருந்தார்; அவர் ஒரு பொய்யராக இருந்தார்’ என்றாள். 70. அவர் (அவள்), ‘ஏன், சகோதரன் பிரன்ஹாமே, அவர் தெய்வீகமானவராக இல்லை. அவரால் அவ்வாறு இருக்க முடிய வில்லை. அவர் தெய்வீகமானவரல்ல என்று வேதாகமத்தைக் கொண்டு என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும்’ என்றாள். நான், ‘நீ வேதாகமத்தைக் கொண்டு அதை நிரூபித்தால், நான் அதை ஏற்றுக் கொள்வேன்’என்றேன். அவள், ‘சரி’ என்றாள். அவள், ‘பரிசுத்த யோவான் 11-ம் அதிகாரத்தில், இயேசு லாசருவுடைய கல்லறையண்டை போன போது, அவர் அழுததாக வேதாகமம் கூறுகிறது. அவர் ஒரு மனிதனாய் இருந்ததை அது நிரூபிக்கிறது; ஒரு மனிதனைப் போன்று அவர் அழுது கண்ணீர் விட்டார்’ என்றாள். நான், ‘நிச்சயமாக அவர் அழுதார், ஆனால் அவர் தேவன் –மனிதனாக இருந்தார். அவர் லாசருவுடைய கல்லறையண்டை போன போது, அவர் ஒரு மனிதனைப் போல அழுதிருக்கலாம், ஆனால் ஒரு மனிதன் மரித்து, அழுகிப் போய், நான்கு நாட்களாக கல்லறையில் படுத்திருந்த போது, அவர் கல்லைப் புரட்டினார், சுற்றிலும் எல்லாவிடங்களிலும் துர்நாற்றம் வீசியது, அவர் அங்கே நின்றார், அழுது கொண்டிருந்த அதே மனிதர் உரைத் தார், ‘லாசருவே, வெளியே வா’ என்றார். மரித்து நான்கு நாட்க ளான ஒரு மனிதன் – அவனுடைய ஆத்துமா நான்கு நாட்களாக எங்கோ பிரயாணம் போயிருந்தது, அவன் உயிர்த்தெழுந்து காலூன்றி நின்ற போது, அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். அது தேவன் தம்முடைய குமாரன் வழியாக பேசுவதாகும். அவர் தேவன் – மனிதராக இருந்தார்’ என்றேன். 71. அவர் அந்த இரவு நேரத்தில் அங்கே நின்றிருந்த போது, நிச்சயமாக அவர் ஒரு மனிதனாக இருந்தார், அந்த மலையின் மேல் முழு இரவும் உபவாசித்து ஜெபித்துக் கொண் டிருந்தார். அடுத்த நாள் அவர் கீழிறங்கி வந்து, அந்த மரத்தின் மேல் நோக்கிப் பார்த்து ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என்று காண முயற்சித்துக் கொண்டிருந்தார், அங்கே அத்திப் பழமே இல்லாதிருந்தது – சாப்பிட அவருக்கு அங்கே எதுவுமேயில்லை, அந்த மரத்தில் அத்திப்பழமில்லை. அவர் பசியாயிருந்த போது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு சிறு மீன்களையும் எடுத்து, 5000 பேரை போஷித்த போது, அது ஒரு மனிதனைக் காட்டிலும் மேலானதாக இருந்தது, அது தேவன் தம்முடைய குமாரனில் இருந்ததாகும். சரி. அவர் மிகவும் களைப்படையும் வரையில் நாள் முழுவதும் பிரசங்கித்துக் கொண்டும், சுகமளித்துக் கொண்டும் இருந்த பிறகு, அவர் அந்த படகில் படுத்திருந்த போது, அந்த இரவில் அவர் ஒரு மனிதனாக இருந்தார். சமுத்திரத்திலிருந்த பத்தாயிரம் பிசாசுகள் அந்த இரவு நேரத்தில் அவரை மூழ்கடித்து கொன்று போட்டு விட வேண்டுமென்று சூளுரைத்திருந்தன. அந்த சிறு படகானது கடலில் ஒரு குப்பியின் மூடியைப் போல அங்கிருந்த போது, பிசாசு, ‘நாம் இப்பொழுது அவரைப் பிடித்துக் கொண்டோம்’ என்றது. அது இவ்விதமாக மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது, அவரோ நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார், அவர் களைப்புற்றிருந்தார், அவரை எதுவும் தூக்கத்தை விட்டு எழுப்பவும் கூட இல்லை. ஆனால் அவர் - சீஷர்கள் அவரை எழுப்பிய போது, அங்கே படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் அந்த படகின் கப்பற்பாயின் நுனிக்கயிற்றின் (brail) மேல் தம்முடைய காலை வைத்தபடி, ‘இரையாதே, அமைதலாயிரு’ என்று கூறின போது. காற்றும் அலைகளும் அவருக்குக் கீழ்ப்படிந்தன... அல்லேலூயா. நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா. 72. அவர் கல்வாரியில் தொங்கியபடி, ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்?’ என்று இரக்கத்துக்காக கதறி சத்தமிட்டபோது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். மேலும் அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு தசையும் நடுங்கிக் கொண்டிருந்தவாறு, ஜீவனுடைய இரத்தமானது கீழே சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்த போது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். அவர்கள் அவரை அடக்கம் செய்தனர், அவர் ஒரு மனிதனைப் போன்று மரித்தார். ஆனால் அவர் ஈஸ்டர் காலையன்று உயிர்த்தெழுந்த போது, அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவராக இருந்தார். அவர் தாம் தேவன் என்பதை நிரூபித்தார். அல்லேலூயா. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். பரிபூரணமாக சுகமடைந்தாள். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? அவர் பூமியில் இருந்த போது செய்த அடையாளங்களும் அற்புதங்களும் இங்கே இரவும் பகலும் செய் யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்? நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் சரியாக இங்கே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இப்பொழுது தேவனிடம் எதைக் கேட்டாலும், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? அல்லேலூயா. நான் பித்துபடித்தவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, என்னைத் தனியே விட்டு விடுங்கள், நான் சந்தோஷமாயிருக்கிறேன். 73. பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரும் சரியாக இப்பொழுதே சுகமடையக் கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? ஒவ்வொரு பாவியும் இரட்சிக்கப்பட முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்? இயேசு கிறிஸ்து இப்பொழுது இங்கேயிருக்கிறார். நீங்கள் காலூன்றி நிற்பீர்கள் என்று விசுவாசித்தால், நாம் இப்பொழுது அவருக்குத் துதியை செலுத்துவோம். ஒவ்வொருவரும் அவருக்கு துதியை செலுத்துங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, கர்த்தராகிய இயேசுவே வாரும், உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையை அனுப்பும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதியும்.